காங்., கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்ஓசூர்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்., கட்சி சார்பில், காஸ் விலை உயர்வு, அத்தியாவசிய உணவு பொருட்கள் மீது விதிக்கப்பட்ட, 5 சதவீத ஜி.எஸ்.டி., வரி விதித்த மத்திய அரசை கண்டித்து, ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் முன், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கீர்த்திகணேஷ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மாநில செயலாளர் வீரமுனிராஜ் பேசினார். தொடர்ந்து, தேன்கனிக்கோட்டை சாலையில் காங்., கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் குண்டுகட்டாக துாக்கி அப்புறப்படுத்தினர். திடீர் மறியல் காரணமாக, தேன்கனிக்கோட்டை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இளைஞரணி மாவட்ட தலைவர் அப்துர் ரஹ்மான், விவசாய அணி மாவட்ட தலைவர் ஹரிஷ்பாபு, தேன்கனிக்கோட்டை நகர தலைவர் பால்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.*தர்மபுரி, மாவட்ட காங்., கட்சி சார்பில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி, தர்மபுரி டவுன் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் தீர்த்தராமன் தலைமை வகித்தார். அகில இந்திய காங்., கமிட்டி உறுப்பினர் சித்தையன் முன்னிலை வகித்தார். இதில், நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்தை கட்டுப்படுத்த, இளைஞர்களுக்கு மத்திய அரசு உடனடியாக வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி., வரியை உடனே ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மாவட்ட தலைவர் மோகன், பொருளாளர் முத்து உள்பட பலர் பங்கேற்றனர்.மாணவர்களுக்கு 'போதை' விழிப்புணர்வுஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சாமல்பள்ளம் அருகே உள்ள இம்மிடிநாயக்கனப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு, சூளகிரி போலீசார் சார்பில், போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இன்ஸ்பெக்டர் ரஜினி தலைமை வகித்து, போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.*தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், கடத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி தலைமையில், எஸ்.ஐ.,நேரு, பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளி தலைமை ஆசிரியர் மாதம் உள்ளிட்ட ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், போலீசார் பங்கேற்றனர்.*பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பென்னாகரம் போலீசார் சார்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி உதவி தலைமை ஆசிரியர் லட்சுமணன் தலைமை தாங்கினார். தமிழாசிரியர் முனியப்பன் வரவேற்றார். போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன் முன்னிலை வகித்தார். பென்னாகரம் டி.எஸ்.பி., இமயவரம்பன் போதைப் பொருளை தடுப்பது குறித்து பேசினார்.*ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், போதை பொருள் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஊத்தங்கரை டி.எஸ்.பி.,அமலஅட்வின், உத்தரவின் பேரில், ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் பள்ளி மாணவர்களிடையே, போதைப் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.வாலிபர்களுக்கு மேயர் பாராட்டுஓசூர்: ஓசூர் பகுதியில் கடந்த, 3ம் தேதி மாலை கனமழை பெய்தது. அப்போது, பஸ் ஸ்டாண்ட் அருகே சாலையோரம் இருந்த கால்வாயில், அவ்வழியாக வந்த நபர் தவறி விழுந்து, தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அப்போது, அங்கிருந்த இரு வாலிபர்கள் உடனடியாக, கால்வாயில் இருந்து அந்த நபரை மீட்டு காப்பாற்றினர். அவர்களை, ஓசூர் மாநகர மேயர் சத்யா, சால்வை அணிவித்து பாராட்டினார். மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, தி.மு.க., இலக்கிய அணி அமைப்பாளர் எல்லோராமணி உட்பட பலர் உடன் இருந்தனர்.அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்அரூர்: அரூர் ஒன்றிய, நகர அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சரும், தர்மபுரி மாவட்ட செயலாளருமான அன்பழகன் தலைமை வகித்து பேசுகையில், ''வரும், 9ல், அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி தர்மபுரிக்கு வரவுள்ளார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கும் வகையில், அரூர் நகரம் மற்றும் வடக்கு, தெற்கு ஒன்றியங்களில் இருந்து அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு வரவேண்டும்,'' என்றனர். அரூர் எம்.எல்.ஏ., சம்பத்குமார், தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி, நகர செயலாளர் பாபு, நிர்வாகிகள் செண்பகம் சந்தோஷ், சரவணன், சிவன் உள்பட, 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.