வரலட்சுமி விரதம்; பெண்கள் வழிபாடு

Added : ஆக 06, 2022 | |
Advertisement
தர்மபுரி,-வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில், பெண்கள் தங்கள் வீடுகளில் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.வரலட்சுமி விரதத்தையொட்டி, சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்க, செல்வவளம், உடல் ஆரோக்கியம், தாலி பாக்கியம் நிலைக்க விரதத்தை கடைபிடித்து அம்மனை வழிபடுவது வழக்கம். இந்நிலையில், வரலட்சுமி தினமான நேற்று, மஞ்சள்

தர்மபுரி,-வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில், பெண்கள் தங்கள் வீடுகளில் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.வரலட்சுமி விரதத்தையொட்டி, சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்க, செல்வவளம், உடல் ஆரோக்கியம், தாலி பாக்கியம் நிலைக்க விரதத்தை கடைபிடித்து அம்மனை வழிபடுவது வழக்கம். இந்நிலையில், வரலட்சுமி தினமான நேற்று, மஞ்சள் கயிறு வைத்து மகாலட்சுமியிடம் பூஜித்து, அதை சுமங்கலி பெண்கள் அணிந்து கொண்டனர்.தர்மபுரி மாவட்டம், அரூர் பழையபேட்டை சக்தி மாரியம்மன் கோவிலில், வரலட்சுமி விரதத்தை யொட்டி, நேற்று அம்மனுக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. பங்கேற்ற பெண்களுக்கு ஜாக்கெட் துணி, தாலி கயிறு, மஞ்சள், குங்குமம், வளையல்கள் உள்ளிட்ட மங்கல பொருட்கள் வழங்கப்பட்டன.*கிருஷ்ணகிரி பழையபேட்டை கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் பெண்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். நெய் விளக்கேற்றி, மகாலட்சுமிக்குரிய பாராயணப் பாடல்களை பாடித் தியானித்தனர். கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடு நடந்தன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X