ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் தரிசனம்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
தர்மபுரி,-ஆடி மாத மூன்றாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, தர்மபுரியில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது.ஆடி வெள்ளியை முன்னிட்டு, தர்மபுரி அடுத்த இலக்கியம்பட்டி சாலை மாரியம்மன் கோவிலில், நேற்று காலை அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. பின், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் அம்மனை


தர்மபுரி,-ஆடி மாத மூன்றாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, தர்மபுரியில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது.ஆடி வெள்ளியை முன்னிட்டு, தர்மபுரி அடுத்த இலக்கியம்பட்டி சாலை மாரியம்மன் கோவிலில், நேற்று காலை அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. பின், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். இதேபோல், தர்மபுரி அடுத்த செந்தில்நகர் புற்றுகோவிலில், ஏராளமான பக்தர்கள் புற்றில் பால் மற்றும் முட்டை வைத்து வழிபட்டனர். எஸ்.வி.,ரோடு அங்காளம்மன் கோவில், நெசவாளர்காலனி சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்பட, தர்மபுரியின் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று, ஆடி வெள்ளியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.*கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு அபிேஷகம் செய்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டது.ஜோதி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன், பழையபேட்டை நேதாஜி சாலையில் உள்ள சமயபுரத்து மாரியம்மன் கோவில்களில், வளையல் அலங்காரத்தில் அருள் பாலித்தனர். புதுப்பேட்டை ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவில், ஜக்கப்பன்நகரில் உள்ள ராஜகாளியம்மன் கோவில், ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில்களில் அம்மனுக்கு அபிேஷகமும், அலங்காரமும் நடந்தன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X