உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி தர்மபுரியில் விழிப்புணர்வு பேரணி

Added : ஆக 06, 2022 | |
Advertisement
தர்மபுரி,-உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி, தர்மபுரியில் நடந்த விழிப்புணர்வு பேரணியை, கலெக்டர் சாந்தி துவக்கி வைத்தார்.ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட், 1 முதல், 7 வரை உலக தாய்ப்பால் வார விழாவாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், மாவட்ட அளவிலான


தர்மபுரி,-உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி, தர்மபுரியில் நடந்த விழிப்புணர்வு பேரணியை, கலெக்டர் சாந்தி துவக்கி வைத்தார்.ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட், 1 முதல், 7 வரை உலக தாய்ப்பால் வார விழாவாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், மாவட்ட அளவிலான உலக தாய்ப்பால் வார விழா உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, தாய்ப்பால் தவிர பிற திரவங்கள் தருவதை தவிர்ப்போம். பிறந்த ஒரு மணி நேரத்திற்குள், தாய்ப்பால் கொடுப்பதைத் தொடங்குவதற்கும், தோலுடன் தோல் தொடர்பு கொள்வதற்கும், என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை, அங்கன்வாடி பணியாளர்கள், செவிலியர், கல்லுாரி மாணவியர் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.முன்னதாக, இது குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். டி.ஆர்.ஒ., அனிதா உள்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X