கனமழையால் ஏரி நிரம்பி மறுகால் சென்ற நீர் வெள்ளத்தில் சிக்கி உயிர் தப்பிய தொழிலாளி| Dinamalar

கனமழையால் ஏரி நிரம்பி மறுகால் சென்ற நீர் வெள்ளத்தில் சிக்கி உயிர் தப்பிய தொழிலாளி

Added : ஆக 06, 2022 | |
ஓசூர்,-தேன்கனிக்கோட்டை அருகே, கனமழையால் ஏரி நிரம்பி மறுகால் சென்ற நிலையில், சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்தது. அவ்வழியாக சென்ற தொழிலாளி மற்றும் அவரது பைக்கை, வெள்ளம் அடித்து சென்றது. மரக்கிளையை பிடித்து தொழிலாளி உயிர் தப்பினார்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், அந்தேவனப்பள்ளி


ஓசூர்,-தேன்கனிக்கோட்டை அருகே, கனமழையால் ஏரி நிரம்பி மறுகால் சென்ற நிலையில், சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்தது. அவ்வழியாக சென்ற தொழிலாளி மற்றும் அவரது பைக்கை, வெள்ளம் அடித்து சென்றது. மரக்கிளையை பிடித்து தொழிலாளி உயிர் தப்பினார்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், அந்தேவனப்பள்ளி பகுதியில் உள்ள, 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சீனிவாசா ஏரி நேற்று நிரம்பி மறுகால் சென்றது. ஏரி நிரம்பியதால், அப்பகுதியில் உள்ள சாலையை மூழ்கடித்தபடி வெள்ளம் சென்றது.அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அன்றாட வேலைக்கு செல்லும் மக்கள், பயன்படுத்தும் சாலையில் வெள்ளம் சென்றதால், வேறு வழியின்றி ஒருவரை ஒருவர் பிடித்தபடி தண்ணீரை கடந்து மக்கள் மறுகரைக்கு சென்றனர். விவசாயிகளும் தங்களது விளைபொருட்களுடன் ஆபத்தை உணராமல் தண்ணீரை கடந்து சென்றனர்.ராமச்சந்திரம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜேந்திரன், அவ்வழியாக பைக்கில் சென்ற போது, அவரை வெள்ள நீர் அடித்து சென்றது. அப்போது, அங்கிருந்த மரக்கிளையை பிடித்து அவர் உயிர் தப்பினார். ஆனால், 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அவரது பைக், நீரில் அடித்து செல்லப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X