மாயமான விவசாயி சடலமாக மீட்பு

Added : ஆக 06, 2022 | |
Advertisement
ஓசூர்-உத்தனப்பள்ளி அருகே, மாயமான விவசாயி சடலமாக நேற்று மீட்கப்பட்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்த அலேசீபத்தை சேர்ந்தவர் மதுராஜ், 56; விவசாயி. கடந்த, 3ம் தேதி காலை வீட்டில் இருந்து பைக்கில் வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை.பல்வேறு இடங்களில் தேடியும் அவர் இருக்குமிடம் தெரியாததால், அவரது மகன் ரூபேஷ்குமார், உத்தனப்பள்ளி போலீசில் நேற்று முன்தினம் புகார்

ஓசூர்-உத்தனப்பள்ளி அருகே, மாயமான விவசாயி சடலமாக நேற்று மீட்கப்பட்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்த அலேசீபத்தை சேர்ந்தவர் மதுராஜ், 56; விவசாயி. கடந்த, 3ம் தேதி காலை வீட்டில் இருந்து பைக்கில் வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை.பல்வேறு இடங்களில் தேடியும் அவர் இருக்குமிடம் தெரியாததால், அவரது மகன் ரூபேஷ்குமார், உத்தனப்பள்ளி போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிந்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில், உத்தனப்பள்ளி - கெலமங்கலம் சாலையில் கோவிந்தாபுரம் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள பாறையின் மீது, நேற்று காலை மதுராஜ் சடலமாக கிடப்பது தெரிந்தது. அவரது பைக் அருகில் நின்றது.போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்த போது, கடந்த பல ஆண்டுக்கு முன்பே, தன் நிலத்தை விற்று விட்ட மதுராஜ், கடன் தொல்லை காரணமாக மனமுடைந்து, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X