அனல் மின்சாரம் உற்பத்தி குறைப்பு..

Added : ஆக 06, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை-கன மழையால் மின் தேவை குறைந்துள்ளதால், நிலக்கரியை மிச்சப்படுத்த, அனல் மின் நிலையங்களில் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.தமிழக மின் வாரியத்திற்கு, 4,320 மெகா வாட் திறனில், ஐந்து அனல் மின் நிலையங்கள் உள்ளன. அவற்றில் தினமும், 3,000 மெகா வாட் வரை, மின் உற்பத்தி செய்யப்படும். மே மாதம் முதல் காற்றாலைகளில் அதிக மின்சாரம் கிடைத்தது.இதனால் மின் தேவையை பூர்த்தி செய்வதில், அந்த
அனல் மின்சாரம் உற்பத்தி குறைப்பு..

சென்னை-கன மழையால் மின் தேவை குறைந்துள்ளதால், நிலக்கரியை மிச்சப்படுத்த, அனல் மின் நிலையங்களில் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.

தமிழக மின் வாரியத்திற்கு, 4,320 மெகா வாட் திறனில், ஐந்து அனல் மின் நிலையங்கள் உள்ளன. அவற்றில் தினமும், 3,000 மெகா வாட் வரை, மின் உற்பத்தி செய்யப்படும். மே மாதம் முதல் காற்றாலைகளில் அதிக மின்சாரம் கிடைத்தது.இதனால் மின் தேவையை பூர்த்தி செய்வதில், அந்த மின்சாரம் அதிகம் பயன்படுத்தப்பட்டதால், அனல் மின் உற்பத்தி, 2,000 மெகா வாட் கீழ் குறைக்கப்பட்டது.

ஜூலை இறுதியில் காற்றாலை மின்சாரம் குறைந்ததால், அனல் மின் நிலையங்களில் மீண்டும், 3,000 மெகா வாட் மேல் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. சில தினங்களாக, பல மாவட்டங்களில் கன மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.இதையடுத்து, நிலக்கரியை மிச்சப்படுத்த, சேலம் - மேட்டூர், துாத்துக்குடி, திருவள்ளூர் - வட சென்னை ஆகிய அனல் மின் நிலையங்களில், ஆறு அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, 2,000 மெகா வாட் அளவிற்கு மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
06-ஆக-202213:30:14 IST Report Abuse
raja இப்படி உற்பத்தி அளவை குறைச்சா தானே வெளியில் கொள்முதல் செய்து கொள்ளை அடிக்கமுடியும்..... ஆவின்ல விளம்பரத்துல ஒரு கோடி புறங்கை நக்கிடானுவோ இப்போ மறுபரியும் மின்சாரத்தில் ... திருட்டு திராவிட ஓங்கோலன் துக்ளக்கும் அணிலும் உலக மகா கொள்ளையணுவோளா மாறிக்கிட்டு இருக்கானுவோ.....
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
06-ஆக-202208:05:34 IST Report Abuse
duruvasar இந்த மின்வாரிய செய்தி குறிப்பு செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கோ, மக்களுக்கோ எதுவும் புரியாது. தெரியாது. ஒரு வாரம் 2000 மெகா வாட் மின்சாரம் வங்க வாரியம் ஒபாந்தம் போட போகிறது என்ற செய்தி, அடுத்த வாரம் மினுற்பதியை நிறுத்தும் செய்தி. வாங்கும் போதும் சரி நிருத் திவைகும் போதும் மின் வெட்டு மட்டும் தொடர்கிறது. அரசு மட்டுமல்ல ஊடகங்களும் எந்த செய்தியையும் மக்களுக்கு வெளிப்படைத்தன்மை யுடன் சொல்லகூடாது என்பதில் கைகோர்த்து நிற்பது தெரிகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X