மாணவர்கள் போதை வஸ்து பயன்படுத்தினால் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை: கலெக்டர்

Added : ஆக 06, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
விழுப்புரம் : பள்ளி மாணவர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துவது தெரிந்தால், தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.விழுப்புரம் கலெக்டர் கூட்ட அரங்கில் போதை பொருட்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.எஸ்.பி. ஸ்ரீநாதா முன்னிலை வகித்தார்.
மாணவர்கள் போதை வஸ்து பயன்படுத்தினால் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை: கலெக்டர்

விழுப்புரம் : பள்ளி மாணவர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துவது தெரிந்தால், தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விழுப்புரம் கலெக்டர் கூட்ட அரங்கில் போதை பொருட்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.எஸ்.பி. ஸ்ரீநாதா முன்னிலை வகித்தார். வருவாய், கல்வித்துறை, வனத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் தலைமை தாங்கிய கலெக்டர் மோகன் பேசியதாவது:போதை பொருட்கள் நடமாட்டம் குறித்து போலீஸ், கடலோர காவல்படை, வனத்துறை, ரயில்வே போலீஸ் மூலம் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் தவறுகள் நடப்பதிற்கு பல்வேறு சந்தர்ப்ப கால சூழ்நிலைகள் உருவாகின்றன.அதைத் தடுப்பது ஆசிரியர்கள் தலையாய கடமை. பள்ளி நேரம் துவங்கியதும் மாணவர்களை வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது. வெளி நபர்கள் பள்ளி மாணவர்களுடன் தொடர்பு கொள்வது தெரிந்தால், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி நல்வழிப்படுத்த வேண்டும்.

பள்ளியில் தவறு நடப்பது தெரிந்தும், கண்டும் காணாமல் மாணவர்களை வெளியே அனுமதிப்பது தெரிந்தால், பள்ளி தலைமையாசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.அரசு பள்ளி மாணவர்கள் லெக்கின்ஸ் டைட்டாகவும், முட்டி வரையும் பேண்ட் அணிந்து வருகின்றனர். தலைமுடி சரியாக வெட்டுவதில்லை. சீருடையை சரியாக அணிவது கிடையாது. இதையெல்லாம் பள்ளி தலைமையாசிரியர் கண்காணித்து மாணவர்களை ஒழுங்குப்படுத்த வேண்டும்இவ்வாறு கலெக்டர் பேசினார்.


பள்ளியில் கஞ்சா: டி.எஸ்.பி., பகீர்

செஞ்சி டி.எஸ்.டி. பிரியதர்ஷினி பேசுகையில், செஞ்சி, மேல்மலையனுார், அனந்தபுரம் பகுதியில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் பள்ளி சீருடையுடன் வெளியே வந்து கஞ்சா புகைக்கின்றனர். மதிய இடைவேளையில் வெளியே வரும் மாணவர்கள், மொபைல்போன் மூலம் கஞ்சா விற்பனையாளரை தொடர்பு கொண்டு கஞ்சா வாங்கி வந்து, பள்ளி வளாகத்தில் மற்ற மாணவர்களுக்கு சப்ளை செய்கின்றனர். எனவே, பள்ளி நேரத்தில் மாணவர்கள் வெளியே செல்வதை தடுக்க வேண்டும்' என்றார்.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-ஆக-202213:14:00 IST Report Abuse
அப்புசாமி சக மாணவர்களே பள்ளிக்கு உள்ளே வந்து கஞ்சா விக்கிறாங்களாம்.
Rate this:
Cancel
06-ஆக-202213:12:22 IST Report Abuse
அப்புசாமி மாணவர்களுக்கு வயத்து வலி வந்தாலும், மாணவர்களுக்கு படிப்பு வராட்டாலும், மாணவர்கள் தறுதலையாய் திரிந்தாலும் ரலைமை ஆடிரியர்களே பொறுப்பு. மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்பவர்களைப் பிடிக்கத் துப்பில்லாத போலீசு, எல்லாத்துக்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பு. நீங்கள்ளாம் எதுக்கு இருக்கீங்க?
Rate this:
Cancel
06-ஆக-202211:21:13 IST Report Abuse
Krishna Moorthy அப்படியானால் மந்திரிகள் தவறு செய்தால் முதல்வர் பொறுப்பு என கூறமுடியுமா? விற்க சொல்வது யார், விற்பது யார், பணம் எப்படி கைமாறியது, என கண்டுபிடித்து சட்டப்படி தண்டிப்பது அரசின் கடமையே தவிர பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது இல்லை.
Rate this:
lana - ,
06-ஆக-202221:19:35 IST Report Abuse
lanaஆமா இனிமேல் மாணவர்கள் க்கும் கக்கா வரலன்னு சொன்னா கூட தலைமை ஆசிரியர் தான் பொறுப்பு. மத்த போலீஸ் இதர துறை அனைத்து சம்பளம மட்டும் வாங்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் எதற்கு பிள்ளை பெற மட்டும் செய்யலாம். அனைத்து ஆசிரியர்களும் இனிமேல் முன்ஜாமீன் உடன் திரிவது நல்லது. ஏன் படிக்க வில்லை என கேட்க கூடாது. கேட்டா அடித்தார் என complaint. ஆமா இந்த துறையில் மந்தி (ரி) என ஒன்று உண்டு தானே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X