விழுப்புரம் : மத்திய அரசை கண்டித்து விழுப்புரம், திண்டிவனத்தில் காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரத்தில் மத்திய மாவட்ட தலைவர் சீனிவாசகுமார் தலைமை தாங்கினார். நகர தலைவர் செல்வராஜ் வரவேற்றார். அகில இந்திய காங்., உறுப்பினர் ராமமூர்த்தி, மாநில செயலாளர் வழக்கறிஞர் தயானந்தம், மாநில துணைத் தலைவர் முகமது குலாம் மொய்தீன், பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன், நகர மன்ற உறுப்பினர் சுரேஷ்ராம் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், பால் உள்ளிட்ட பொருட்களுக்கு மீது ஜி.எஸ்.டி. விதிப்பு, பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து பேசினர்.மாணவர் காங்., பொதுச் செயலாளர் சத்தியநாராயணன் நன்றி கூறினார்.
திண்டிவனம்
மேம்பாலத்தின் கீழ் உள்ள தலைமை தபால் நிலையம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். நகர தலைவர் விநாயகம் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் கருணாகரன், முன்னாள் மாவட்ட தலைவர் தனுசு, நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பட்டத்தின் முடிவில் 11:50 மணியளவில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை 12:00 மணியளவில் அப்புறப்படுத்தினர்.