தங்கும் விடுதிகளை பதிவு செய்ய வேண்டும்: மீறினால் 3 ஆண்டு சிறை: கலெக்டர் எச்சரிக்கை

Added : ஆக 06, 2022 | |
Advertisement
விழுப்புரம் : தனியார் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர்கள் தங்கும் விடுதிகளை முறைப்படி பதிவு செய்யாவிட்டால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.இதுகுறித்து கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் தங்கும் விடுதிகளை நடத்தி வருகின்றனர். இது தவிர குழந்தைகள், முதியோர் இல்லங்கள் மற்றும் பணிபுரியும் மகளிர் விடுதிகள் ஆகியவை

விழுப்புரம் : தனியார் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர்கள் தங்கும் விடுதிகளை முறைப்படி பதிவு செய்யாவிட்டால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.

இதுகுறித்து கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் தங்கும் விடுதிகளை நடத்தி வருகின்றனர். இது தவிர குழந்தைகள், முதியோர் இல்லங்கள் மற்றும் பணிபுரியும் மகளிர் விடுதிகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சிலர் பதிவு செய்யாமலும், பதிவுகளை புதுப்பிக்காமலும் இயங்கி வருவதாக புகார் வருகிறது.விடுதி நிர்வாகிகள் https://tnswp.com என்ற இணையதளம் மூலம் உரிய சான்றுகளுடன் தாங்கள் நடத்திவரும் விடுதிகளை பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் போன்றவற்றை வரும் 31ம் தேதிக்குள் மேற்கொள்ளவேண்டும்.

இதனை கண்காணிக்க மாவட்ட அளவில் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும்.ஆய்வின்போது குறைபாடுகளை கண்டறியும் பட்சத்தில் சட்டப்படி, விடுதிகள் உடனடியாக மூடுப்படும். மேலும், சம்மந்தப்பட்ட நிர்வாகிகள் மீது காவல் துறை மூலம் வழக்கு தொடர்ந்து அதிகபட்சமாக 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X