பதவி உயர்வு விதிமுறை: தமிழக அரசு உத்தரவு

Updated : ஆக 06, 2022 | Added : ஆக 06, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
சென்னை : 'அரசு அலுவலர்கள் ஓய்வு பெறவுள்ள நிலையில், செயற்கையாக காலிப் பணியிடங்களை ஏற்படுத்தி, பதவி உயர்வு வழங்குவதும், தகுதி உள்ள அலுவலர்கள், பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெறுவதும் தவிர்க்கப்பட வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தலைமைச் செயலர் இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணை:அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் நாளில் அல்லது அதற்கு சில நாட்கள் முன்னதாக, பதவி உயர்வு
பதவி உயர்வு,  தமிழக அரசு, இறையன்பு , TNGovt, Iraiyanbu,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphoneசென்னை : 'அரசு அலுவலர்கள் ஓய்வு பெறவுள்ள நிலையில், செயற்கையாக காலிப் பணியிடங்களை ஏற்படுத்தி, பதவி உயர்வு வழங்குவதும், தகுதி உள்ள அலுவலர்கள், பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெறுவதும் தவிர்க்கப்பட வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தலைமைச் செயலர் இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணை:அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் நாளில் அல்லது அதற்கு சில நாட்கள் முன்னதாக, பதவி உயர்வு அளிப்பதற்கு வசதியாக, பணியில் உள்ள மூத்தோர் விடுப்பில் செல்கின்றனர்.அதனால் ஏற்படும் செயற்கையான காலிப் பணியிடங்களில், சிலரை பதவி உயர்வு அளித்து அமர்த்துவதை, கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.அரசு பணியாளர்கள் உரிய காலத்தில், பதவி உயர்வு பெற வசதியாக, பெயர் பட்டியலை வெளியிடுவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கவும், அறிவுரைகள் வழங்கப்பட்டன.


latest tamil news


எனினும் சில நிகழ்வுகளில், பெயர் பட்டியல் தாமதமாக வெளியிடப்பட்டு, முழு தகுதி உடையோருக்கு உரிய காலத்தில், பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் இல்லாத நிலை ஏற்படுகிறது.சில அலுவலர்களுக்கு ஓய்வு பெறும் நாளில் அல்லது சில நாட்களுக்கு முன்னர், பதவி உயர்வு வழங்க, செயற்கையாக காலிப் பணியிடங்கள் ஏற்படுத்துதல், பதவி நிலை உயர்த்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பதவி உயர்வுக்கான முறை வரும் முன்பாகவே, பதவி உயர்வு வழங்க வசதியாக, பதவி நிலையை உயர்த்தி, பணப் பலன்களுக்காக கருத்துருக்கள் ஏற்படுத்துவது, அரசின் கவனத்திற்கு வந்தது.எனவே, நடைமுறையில் உள்ள விதிகள் மற்றும் அறிவுறுத்தலுக்கு இணங்க, ஒவ்வொரு ஆண்டும் காலதாமதமின்றி உரிய காலத்தில், பதவி உயர்வுக்கு தேர்ந்தெடுத்தோர் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டு, முறையான பதவி உயர்வுகள் வழங்கப்பட வேண்டும்.

இதன் வழியாக, தகுதியுள்ள அலுவலர்கள் பதவி உயர்வு பெறாமல், ஓய்வு பெறுவது தவிர்க்கப்பட வேண்டும்.சில அரசு அலுவலர்களுக்கு சாதகமான வகையில், அவர் ஓய்வு பெறுவதற்கு சில நாட்கள் முன்னதாகவோ, ஓய்வு பெறும் நாளன்றோ பதவி உயர்வு வழங்கும் வகையில், செயற்கையாக காலிப் பணியிடத்தை ஏற்படுத்தும் செயல்கள் முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும்.இதை அனைத்து நியமன அலுவலர்களும், தவறாமல் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
06-ஆக-202214:40:19 IST Report Abuse
jayvee வெறும் முப்பத்திஐந்து மார்கெடுத்து ஜஸ்ட் பாஸான நபர், ஜாதிய அடிப்படையில், ஐம்பது வயதில் அண்டர் செகிரேட்டரி ஏன் சீப் செக்ரட்டரி கூட ஆகலாம். அனால் 95 ஐந்து மதிப்பெண் எடுத்த நபர், ஜாதிய அடிப்படையில் வெறும் சுப்ரீஇன்டென்டாக பணிஓய்வு பெற வேண்டும்.. இதுதான் எழுபதுஆண்டு திராவிட சாக்கடை அரசுகளின் சாதனை ..
Rate this:
Cancel
06-ஆக-202212:51:19 IST Report Abuse
ஆரூர் ரங் ஆனா 90 வயது தாத்தா மீண்டும் முதல்வராகி அரசு சம்பளம் வாங்கலாம்😛. இப்படிக்கு திமுக
Rate this:
Sai - Paris,பிரான்ஸ்
06-ஆக-202215:41:46 IST Report Abuse
Saiஅடாவடியா நான்தான் ஆறாவது முறையாக முதல்வராவேன் என்று சொல்லி சீட்டைப்பிடித்தால் அந்த பகவான் அல்ப்ப்பாயுஸிலே சீட்டை கிழிச்சுட்டானே மேல ஒருத்தன் இருக்கான் குமாரு...
Rate this:
Cancel
sampath, k - HOSUR,இந்தியா
06-ஆக-202211:30:55 IST Report Abuse
sampath, k Govt. Employees should work minimum Three to five years in one category post and then they have to be considered for another promotion. In certain departments, after 50 years they are giving promotion frequently to higher posts and thereby they are getting huge amounts as pension. It should be curtailed.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X