சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா? திண்டிவனம் மக்கள் கோரிக்கை

Added : ஆக 06, 2022 | |
Advertisement
திண்டிவனம் : திண்டிவனம் நகராட்சியின், எல்லைகளை விரிவாக்கம் செய்து, வார்டுகளின் எண்ணிக்கையை உயர்த்தி, சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திண்டிவனம் நகராட்சியின் எல்லையாக தெற்கே ஜக்காம்பேட்டையும், வடக்கே சலவாதியும், கிழக்கே வட ஆலப்பாக்கம் ஊராட்சியும், மேற்கே பெலாக்குப்பம் எல்லைகளுக்குட்பட்ட

திண்டிவனம் : திண்டிவனம் நகராட்சியின், எல்லைகளை விரிவாக்கம் செய்து, வார்டுகளின் எண்ணிக்கையை உயர்த்தி, சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டிவனம் நகராட்சியின் எல்லையாக தெற்கே ஜக்காம்பேட்டையும், வடக்கே சலவாதியும், கிழக்கே வட ஆலப்பாக்கம் ஊராட்சியும், மேற்கே பெலாக்குப்பம் எல்லைகளுக்குட்பட்ட பகுதியாக உள்ளது. நகரத்தில் மொத்த பரப்பளவு 22.33 சதுர கி.மீ., கொண்டுள்ளது.நகராட்சியில் மக்கள் தொகை 2011ம் ஆண்டின் கணக்குப்படி 72 ஆயிரத்து 796 ஆகும். இதில் 36 ஆயிரத்து 338 ஆண்களும், 36 ஆயிரத்து 458 பெண்களும் உள்ளனர். மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்து 433 ஆகும்.

கடந்த 1949ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி மூன்றாம் நிலை நகராட்சியாக உருவானது. அதன் பிறகு 1970ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1998ம் ஆண்டு மே 22ம் தேதி முதல் நிலை நகராட்சியாகவும் அறிவிக்கப்பட்டது. கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி தேர்வு நிலை நகராட்சியாக அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது 33 வார்டுகள் உள்ளன.தேர்வு நிலை நகராட்சியாக அறிவிக்கப்பட்டு, 14 ஆண்டுகள் ஆன நிலையில், ஆரம்பத்தில் இருந்த 33 வார்டுகள் அப்படியே இன்றைக்கும் உள்ளது.

மாவட்டத்தில் விழுப்புரம் தேர்வு நிலை நகராட்சியாக இருந்தாலும், அங்கு 37 வார்டுகள் இருந்த நிலையில் தற்போது, எல்லை விரிவாக்கம் செய்து, நகரத்தையொட்டிள்ள கிராம பகுதிகள் நகராட்சி பகுதியில் இணைக்கப்பட்டு 42 வார்டுகளாக உயர்ந்துள்ளது. அடுத்த கட்டமாக விழுப்புரம் நகராட்சி, மாநகராட்சியாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.ஆனால் திண்டிவனம் நகராட்சி, நகர எல்லையை விரிவாக்கம் செய்யாமல், இன்றளவும் 33 வார்டுகள் என சுருங்கியுள்ளது.

இந்த நகராட்சியை, தேர்வு நிலை நகராட்சியிலிருந்து, அடுத்து சிறப்பு நிலை நகராட்சி, மாநகராட்சி என முன்னேற்றம் அடைய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.நகராட்சியில் தி.மு.க.,வைச் சேர்ந்த பூபாலன் மற்றும் அ.தி.மு.க.,வை சேர்ந்த வெங்கேடசன் நகர மன்ற தலைவராக இருந்த போது, நகராட்சி எல்லையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

ஆனால், என்ன காரணத்தினாலோ அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. கடந்த காலங்களில் திண்டிவனம் நகராட்சி சார்பில், வார்டுகளின் எண்ணிக்கை அதிரிக்கவும், அருகிலுள்ள கிராம ஊராட்சிகளைச் சேர்த்து எல்லைகளை விரிவாக்கம் செய்ய, முறைப்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, உள்ளாட்சித்துறை அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டும் அரசு சார்பில் அனுமதி கிடைக்கவில்லை.

தற்போது ஆளுங்கட்சியாக தி.மு.க., இருப்பதாலும், அதே கட்சியைச் சேர்ந்தவர் நகர மன்ற தலைவராக இருப்பதால், திண்டிவனம் நகராட்சி எல்லையை விரிவாக்கம் செய்து, நகராட்சியின் வருமானத்தை உயர்த்த சரியான தருணம் என விபரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.இதற்கு, மாவட்ட அமைச்சர் மஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X