மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு பணி; துறை அலுவலர்களுடன் ஆலோசனை

Added : ஆக 06, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு பணி மேற்கொள்வதற்கான கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, கலெக்டர் ஷ்ரவன்குமர் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர் மணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செல்வகுமாரன் மற்றும் அரசு அலுவலர் பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், பருவ மழை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு பணி மேற்கொள்வதற்கான கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு, கலெக்டர் ஷ்ரவன்குமர் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர் மணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செல்வகுமாரன் மற்றும் அரசு அலுவலர் பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், பருவ மழை காலங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு, தயார் நிலையில் வைக்க வேண்டும்.

மழைக்காலங்களில் நீரை சேமித்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கு முயற்சிக்கும் விதமாக அதிகளவில் மரக்கன்றுகள் நட வேண்டும்.மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகள் மற்றும் நீர் நிலைகளை புனரமைப்பு செய்தல் உள்ளிட்ட பணிகளை அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X