ஆதிவாலீஸ்வரர் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை

Added : ஆக 06, 2022 | |
Advertisement
விழுப்புரம் : வாலியாம்பிகை ஆதிவாலீஸ்வரர் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.விழுப்புரம் பழைய பஸ் நிலையம் பின்புறம் வாலியாம்பிகை உடனமர் ஆதிவாலீஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலில் ஆடி மாதம் 3ம் வெள்ளியை முன்னிட்டு, நேற்று 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக மாலை 4:30 மணிக்கு அம்மனுக்கு பால் அபிேஷகம், மாலை 5:00 மணிக்கு கோ பூஜை நடந்தது. அதைத் தொடர்ந்து, மாலை 5:30 மணிக்கு 1008

விழுப்புரம் : வாலியாம்பிகை ஆதிவாலீஸ்வரர் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.

விழுப்புரம் பழைய பஸ் நிலையம் பின்புறம் வாலியாம்பிகை உடனமர் ஆதிவாலீஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலில் ஆடி மாதம் 3ம் வெள்ளியை முன்னிட்டு, நேற்று 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக மாலை 4:30 மணிக்கு அம்மனுக்கு பால் அபிேஷகம், மாலை 5:00 மணிக்கு கோ பூஜை நடந்தது. அதைத் தொடர்ந்து, மாலை 5:30 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோவில் செயலாளர் வெங்கடேசன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

சின்னசேலம்

வரலட்சுமி நோன்பையொட்டி சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு கல்முத்தங்கி அலங்காரம் செய்து பூஜை நடந்தது. பூஜையில், சின்னசேலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.இதேபோன்று, சின்னசேலம் விஜயபுரம் வேதவல்லி மாரியம்மன் கோவிலில் குத்து விளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள் பூஜையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X