தரைப்பாலம் அமைப்பது குறித்து எம்.எல்.ஏ., ஆய்வு

Added : ஆக 06, 2022 | |
Advertisement
வானுார் : எடப்பாளையம் - கேணிப்பட்டு சாலையில் தரைப்பாலம் அமைப்பது குறித்து எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.வானுார் தொகுதியில், எடப்பாளையம் - கேணிப்பட்டு இடையே உள்ள பிரதான சாலையை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதியில் தரைப்பாலம் இல்லாததால், மழைக்காலங்களில் சாலையைக் கடந்து செல்ல முடியாத சூழல் இருந்து வருகிறது.குறிப்பாக பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும்

வானுார் : எடப்பாளையம் - கேணிப்பட்டு சாலையில் தரைப்பாலம் அமைப்பது குறித்து எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.

வானுார் தொகுதியில், எடப்பாளையம் - கேணிப்பட்டு இடையே உள்ள பிரதான சாலையை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதியில் தரைப்பாலம் இல்லாததால், மழைக்காலங்களில் சாலையைக் கடந்து செல்ல முடியாத சூழல் இருந்து வருகிறது.குறிப்பாக பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் அவதியடைந்து வந்தனர். இதனால், அப்பகுதியில் தரைப்பாலம் அமைக்கக்கோரி, சக்கரபாணி எம்.எல்.ஏ.,விடம் பொதுமக்கள் மக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து, சக்கரபாணி எம்.எல்.ஏ., அப்பகுதியில் ஆய்வு செய்து, விரைவில் தரைப்பாலம் அமைக்கவும், வரத்து வாய்க்கால் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.அ.தி.மு.க., கிளைச் செயலாளர் கலியமூர்த்தி, மாயவன், சுப்பு, ஏகாம்பரம், ஜானகிராமன், கந்தன், பாலமுருகன், பூபாலன், சங்கரி மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X