ரேஷன் அரிசி கடத்தல் விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணைக்கு வலியுறுத்தல்| Dinamalar

ரேஷன் அரிசி கடத்தல் விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணைக்கு வலியுறுத்தல்

Added : ஆக 06, 2022 | |
புதுச்சேரி : புதுச்சேரியில் ரேஷன் அரிசி பிடிபட்டது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என, சி.பி.ஐ., இணை இயக்குனருக்கு, முன்னாள் எம்.எல்.ஏ., வையாபுரி மணிகண்டன் கடிதம் எழுதி உள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:முத்தியால்பேட்டை சோலை நகரில் ஏழைகளுக்காக வழங்கப்பட்ட இலவச அரிசியை அரசியல் பலம் கொண்ட சமூக விரோதிகள் கொள்ளையடித்துள்ளனர். இங்கிருந்து கடத்தப்பட்ட சுமார்

புதுச்சேரி : புதுச்சேரியில் ரேஷன் அரிசி பிடிபட்டது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என, சி.பி.ஐ., இணை இயக்குனருக்கு, முன்னாள் எம்.எல்.ஏ., வையாபுரி மணிகண்டன் கடிதம் எழுதி உள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:முத்தியால்பேட்டை சோலை நகரில் ஏழைகளுக்காக வழங்கப்பட்ட இலவச அரிசியை அரசியல் பலம் கொண்ட சமூக விரோதிகள் கொள்ளையடித்துள்ளனர். இங்கிருந்து கடத்தப்பட்ட சுமார் 9 டன் ரேஷன் அரிசியை சிறப்பு அதிரடிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யாமல், வாகனத்தை ஓட்டி வந்த 4 பேரை மட்டும் போலீசார் கைது செய்தனர். அரசு பதவியில் உள்ளவர்கள் அரிசி கடத்தலின் பின்னணியில் உள்ளனர். இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் புதுச்சேரி அரசும், காவல்துறையும் எடுக்க முன்வரவில்லை.

அரிசி கடத்தலை மறைக்கும் வகையில், இந்திய உணவுக்கழக குடோனில் இருந்து வீணான அரிசியை வாங்கியதாக போலியான ஆவணங்கள் தயாரித்து பெரும் மோசடி செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. பிடிபட்ட 9 டன் அரிசியையும் அரசியல் பின்புலம் உள்ளவர்கள் விடுவித்துள்ளனர். எனவே இவ் விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தி, இலவச அரிசியை கடத்திய கும்பலை கண்டறிய வேண்டும் என சி.பி.ஐ., இணை இயக்குனருக்கு கடிதம் எழுதி உள்ளேன்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X