கவர்னர் மாளிகையை நோக்கி ஊர்வலம்; முன்னாள் முதல்வர் உட்பட 200 பேர் கைது

Added : ஆக 06, 2022 | |
Advertisement
புதுச்சேரி : காங்., சார்பில் நடந்த முற்றுகை போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் முதல்வர் உள்ளிட்ட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.விலைவாசி உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும் கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை நாடு முழுவதும் காங்., தலைமை அறிவித்து இருந்தது.புதுச்சேரியில் முற்றுகை போராட்டத்திற்காக மிஷன் வீதியில் உள்ள

புதுச்சேரி : காங்., சார்பில் நடந்த முற்றுகை போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் முதல்வர் உள்ளிட்ட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

விலைவாசி உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும் கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை நாடு முழுவதும் காங்., தலைமை அறிவித்து இருந்தது.புதுச்சேரியில் முற்றுகை போராட்டத்திற்காக மிஷன் வீதியில் உள்ள ஜென்மராக்கினி மாதா ஆலயம் அருகே காங்., கட்சியினர் நேற்று காலை குவிந்தனர். அங்கிருந்து கவர்னர் மாளிகையை முற்றுகையிட காங்., தலைவர் சுப்ரமணியன் தலைமையில் ஊர்வலம் புறப்பட்டது.

இதில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ., ஆனந்தராமன், சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ், நீல கங்காதரன், சூசைராஜ், கருணாநிதி, இளையராஜா, அப்துல் ரகுமான், மணவாளன், சுந்தரவடிவேலு, தங்கமணி, சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.ஊர்வலமாக வந்தவர்களை, எஸ்.பி., வம்சித ரெட்டி, இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், கார்த்திகேயன் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட போலீசார், சட்டசபைக்கு பின்புறம் தடுத்து நிறுத்தினர்.

இதனால், அதே இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் காங்., கட்சியினர் ஈடுபட்டனர். பின், கோஷமிட்டபடி பேரிகார்டுகளின் மீது ஏறினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.தொடர்ந்து, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்., தலைவர் சுப்ரமணியன் உள்ளிட்ட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X