காரைக்காலில் காலரா கட்டுக்குள் வந்தது; பொது சுகாதார அவசர நிலை வாபஸ்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
புதுச்சேரி : காலரா, வயிற்றுபோக்கு கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து, காரைக்காலில் பிறப்பிக்கப்பட்ட பொது சுகாதார அவசர நிலை உத்தரவை மாநில சுகாதாரத் துறை வாபஸ் பெற்றுள்ளது.காரைக்கால் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் குடிநீரில், கழிவுநீர் கலந்ததால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டது. திருநள்ளாறு, நெடுங்காடு, கோட்டுச்சேரி, டி.ஆர். பட்டினம்,

புதுச்சேரி : காலரா, வயிற்றுபோக்கு கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து, காரைக்காலில் பிறப்பிக்கப்பட்ட பொது சுகாதார அவசர நிலை உத்தரவை மாநில சுகாதாரத் துறை வாபஸ் பெற்றுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் குடிநீரில், கழிவுநீர் கலந்ததால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டது. திருநள்ளாறு, நெடுங்காடு, கோட்டுச்சேரி, டி.ஆர். பட்டினம், அம்பகரத்தூர், பூவம் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதாரத்துறையினர் நடத்திய ஆய்வில் காலரா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, காரைக்கால் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி, பொது சுகாதார அவசர நிலையை (144 தடை உத்தரவு) சுகாதாரத் துறை அறிவித்தது. தொடர்ந்து, தடுப்பு மற் றும் சிகிச்சை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன.

இந்நிலையில், காலரா, வயிற்றுபோக்கு கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து, காரைக்காலில் கடந்த ஒரு மாதமாக அமலில் இருந்த பொது சுகாதார அவசர நிலை உத்தரவு தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.இதற்கான உத்தரவை சுகாதாரத் துறை இயக்குனர் பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து, சுகாதாரத் துறை இயக்குனர் ஸ்ரீராமுலு கூறும்போது, 'காரைக்கால் மாவட்டத்தில் கலரா, வயிற்றுபோக்கு ஏற்பட்டது. சுகாதாரம், வருவாய், உள்ளாட்சி உள்ளிட்ட அனைத்து துறைகளின் முயற்சியால் இன்றைக்கு முற்றிலும் கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் யாரும் சிகிச்சைக்காக வரவில்லை. எனவே காரைக்கால் மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட பொது சுகாதார அவசர நிலை வாபஸ் பெறப்பட்டுள்ளது' என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X