போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண ஆய்வு

Added : ஆக 06, 2022 | |
Advertisement
புதுச்சேரி : மரப்பாலம் சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதற்கு, சம்பத் எம்.எல்.ஏ., எஸ்.பி., மாறன் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.முதலியார்பேட்டை அடுத்த மரப்பாலம் சாலை சந்திப்பில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அப்பகுதியில் போக்குவரத்து

புதுச்சேரி : மரப்பாலம் சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதற்கு, சம்பத் எம்.எல்.ஏ., எஸ்.பி., மாறன் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

முதலியார்பேட்டை அடுத்த மரப்பாலம் சாலை சந்திப்பில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பது தொடர்பாக, சம்பத் எம்.எல்.ஏ., போக்குவரத்து எஸ்.பி., மாறன் தலைமையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் மரப்பாலம் சாலை சந்திப்பில் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது, மரப்பாலம் சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, சாலையை விரிவுப்படுவது, சிக்னல்களை மறுசீரமைப்பு செய்வது, சாலைகளில் வண்ணம் பூசுதல் மற்றும் சாலைகள் நடுவே தடுப்புச்சுவர் அமைப்பது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X