மணல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு; 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி

Added : ஆக 06, 2022 | |
Advertisement
கச்சிராயபாளையம்: கல்வராயன்மலையில் உள்ள மணல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பகுதிகளில் உற்பத்தியாகும் ஆறுகள், நீரோடைகள் மற்றும் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.நேற்று முன்தினம் பெய்த மழையினால் நேற்று காலை

கச்சிராயபாளையம்: கல்வராயன்மலையில் உள்ள மணல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பகுதிகளில் உற்பத்தியாகும் ஆறுகள், நீரோடைகள் மற்றும் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.நேற்று முன்தினம் பெய்த மழையினால் நேற்று காலை தொரடிப்பட்டு அருகே உள்ள மணல் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் ஆரம்பூண்டி, உப்பூர், வாரம், வாழபூண்டி, எழுத்துார், எட்ரப்பட்டி, சின்ன திருப்பதி உட்பட 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மணல் ஆற்றில் உள்ள தரைப்பாலத்தை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இருப்பினும் ஆபத்தான நிலையில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும் ஆற்று நீரில் தரைப்பாலத்தைக் கடந்து செல்கின்றனர்.

மேலும் அப்பகுதி விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த தக்காளி, பூ, காய்கறிகள், பால் உள்ளிட்டவைகளை மையப்பகுதியான வெள்ளிமலைக்கு கொண்டு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X