ஆசிரியர் வீட்டில் 5 சவரன் திருட்டு; பட்டப்பகலில் மர்ம நபர்கள் துணிகரம்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் பட்டப்பகலில் ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து, 5 சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடலுார் மாவட்டம், விருத்தாசலம், வசந்தம் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 49; என்.எல்.சி., அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர். இவரது மனைவி சரஸ்வதி, 45; அரியலுார் மாவட்டம், ஆண்டிமடம் அரசு ஆரம்ப

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் பட்டப்பகலில் ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து, 5 சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம், வசந்தம் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 49; என்.எல்.சி., அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர். இவரது மனைவி சரஸ்வதி, 45; அரியலுார் மாவட்டம், ஆண்டிமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்.ஆசிரியர் வெங்கடேசன் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற நிலையில், சரஸ்வதி கடலுாரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். நேற்று மாலை திரும்பிய வெங்கடேசன் வீட்டை திறந்து பார்த்தபோது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 5 சவரன் நகை மற்றும், 20 ஆயிரம் ரொக்கத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து, மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X