ஹிந்து கடவுளர்கள் மீது அவதூறு; ஆங்கில வார இதழ் மீது வழக்கு

Updated : ஆக 06, 2022 | Added : ஆக 06, 2022 | கருத்துகள் (41) | |
Advertisement
கான்பூர் : ஹிந்து கடவுளர்களான சிவன் மற்றும் காளி ஆகியவற்றை அவதூறு செய்யும் வகையில் படம் வெளியிட்ட ஆங்கில வார இதழ் ஆசிரியர் மீது உத்தர பிரதேச போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, சர்ச்சைக்குரிய கட்டுரையை எழுதிய பிரபல பொருளாதார நிபுணர் விவேக் தேப்ராய், வார இதழில் வகித்து வந்த கட்டுரையாளர் பணியில் இருந்து விலகினார்.கேரளாவின் 'மலையாள மனோரமா' நாளிதழ்
ஹிந்து கடவுள்,  ஆங்கில வார இதழ், விவேக் தேப்ராய், hindu kadavul, Vivek Debroy,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


கான்பூர் : ஹிந்து கடவுளர்களான சிவன் மற்றும் காளி ஆகியவற்றை அவதூறு செய்யும் வகையில் படம் வெளியிட்ட ஆங்கில வார இதழ் ஆசிரியர் மீது உத்தர பிரதேச போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, சர்ச்சைக்குரிய கட்டுரையை எழுதிய பிரபல பொருளாதார நிபுணர் விவேக் தேப்ராய், வார இதழில் வகித்து வந்த கட்டுரையாளர் பணியில் இருந்து விலகினார்.கேரளாவின் 'மலையாள மனோரமா' நாளிதழ் நிறுவனத்தில் இருந்து 'தி வீக்' ஆங்கில வார இதழ் வெளியாகிறது.

பிரபல பொருளாதார நிபுணர் விவேக் தேப்ராய்,67, தி வீக் இதழில் கட்டுரையாளராக பணி புரிந்தார். கடந்த மாதம் 24ல் வெளியான இதழில் தேப்ராய் எழுதிய ஒரு கட்டுரையில், ஹிந்து கடவுளர்களான சிவன் மற்றும் காளியை அவதூறு செய்யும் வகையில் படங்கள் வரையப்பட்டு இருந்தன. இதற்கு, பா.ஜ., உட்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


latest tamil news


அந்த வார இதழை எரித்து போராட்டம் நடத்தினர்.பா.ஜ.,வின் உத்தர பிரதேச மாநில முன்னாள் துணைத் தலைவர் பிரகாஷ் சர்மா நேற்று முன் அளித்த புகார்படி, தி வீக் வார இதழ் ஆசிரியர் மீது கான்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து வார இதழில் கட்டுரையாளர் பணியை விவேக் தேப்ராய் நேற்று ராஜினாமா செய்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Soumya - Trichy,இந்தியா
06-ஆக-202220:41:34 IST Report Abuse
Soumya இந்த கேடுகெட்ட கிழவனுக்கு யோகியின் புல்டோஸர் ட்ரீட்மெண்ட் தான் சரி
Rate this:
Cancel
P Karthikeyan - Chennai,இந்தியா
06-ஆக-202218:04:15 IST Report Abuse
P Karthikeyan பத்திரிகையாளர்கள் பெரும்பாலும் கம்யூனிச கொள்கை உடையவர்கள். சென்னையில் மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு ஒருவர் இருக்கிறார். அவர் பெயர்(ருக்கு) மட்டும் ஹிந்து பெயர். செய்வதெல்லாம் அறிவாலய வேலை .
Rate this:
Cancel
Priyan Vadanad - Madurai,இந்தியா
06-ஆக-202216:52:38 IST Report Abuse
Priyan Vadanad என்ன ஏது என்று தெரியாமலே வேகமாக பாய்வதெற்கென்று ஒரு கூட்டம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X