வெள்ளை உள்ளத்தையே பகவான் கிருஷ்ணர் திருடினார்: ஆங்கரை ரங்கஸ்வாமி தீட்சிதர் உபன்யாசம்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
புதுச்சேரி: 'பால் போன்ற வெள்ளை உள்ளத்தையே பகவான் கிருஷ்ணர் திருடினார்' என, ஆங்கரை ரங்கஸ்வாமி தீட்சிதர் உபன்யாசம் செய்தார்.புதுச்சேரி கிருஷ்ணா நகரில் உள்ள சின்மய சூர்யா கோவிலில், கடந்த 1ம் தேதி, ஸ்ரீமத் பாகவத மகோற்சவம் துவங்கியது. தினமும் ஆங்கரை ரங்கஸ்வாமி தீட்சிதர் உபன்யாசம் செய்து வருகிறார். கிருஷ்ணாவதாரம் குறித்து நேற்று நடந்த உபன்யாசத்தில் அவர்

புதுச்சேரி: 'பால் போன்ற வெள்ளை உள்ளத்தையே பகவான் கிருஷ்ணர் திருடினார்' என, ஆங்கரை ரங்கஸ்வாமி தீட்சிதர் உபன்யாசம் செய்தார்.

புதுச்சேரி கிருஷ்ணா நகரில் உள்ள சின்மய சூர்யா கோவிலில், கடந்த 1ம் தேதி, ஸ்ரீமத் பாகவத மகோற்சவம் துவங்கியது. தினமும் ஆங்கரை ரங்கஸ்வாமி தீட்சிதர் உபன்யாசம் செய்து வருகிறார். கிருஷ்ணாவதாரம் குறித்து நேற்று நடந்த உபன்யாசத்தில் அவர் பேசியதாவது:

சுயநலமும், கர்வமும் அதிகமுடைய கம்சன் தன் சகோதரி தேவகியை வசுதேவருக்கு திருமணம் முடித்த பின் அவர்களை ரதத்தில் வைத்து அழைத்து வந்தான். அப்போது அசரீரி, தேவகியின் எட்டாவது குழந்தை உன்னை கொல்லும் என்றது. ஏற்கனவே பூமியில் சாதுக்களை துன்புறுத்தி வந்த கம்சன் வெகுண்டெழுந்தான்; தன் சகோதரியை கொல்ல முயன்றான்.

சமயோகிதமாக செயல்பட்ட வசுதேவர், தேவகிக்கு பிறக்கும் குழந்தைகளை கம்சனிடத்தில் கொடுத்து விடுவதாகவும், சகோதரியை கொல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.தான் அளித்த வாக்குறுதியின்படி வசுதேவர் கொடுத்த ஆறு குழந்தைகளையும் இரக்கமில்லாமல் கம்சன் கொன்றான். தேவகி எட்டாவது கர்ப்பம் அடைந்தபோது கம்சன் தேவகியையும் வசுதேவரையும் சிறையிட்டான்.

எட்டாவது குழந்தை பிறந்தபோது பூரண சந்திரன் உதயமானதுபோல் பிரகாசம் ஏற்பட்டது. அக்குழந்தை தாமரை போன்ற கண்களுடன் நான்கு கைகளுடன் சங்கு சக்கரத்தோடு பிரகாசித்தது. பிறந்த குழந்தை பரம புருஷனான மகா விஷ்ணுவே என அறிந்து தாய் தந்தையர் துதித்தனர்.தாய் மாமன் கம்சனிடமிருந்து கிருஷ்ணரை காக்க, கிருஷ்ணர் பிறந்த நாளன்றே அவரை வசுதேவர் யமுனை ஆற்றுக்கு அப்பால் உள்ள கோகுலத்தில் குடியிருந்த யாதவ குலத்தினரான நந்தகோபர் - யசோதை இணையரிடம் ஒப்படைத்தார்.யசோதைக்கு பிறந்த பெண் குழந்தையை சிறைக்கு எடுத்து வந்தனர். தேவகிக்கு எட்டாவது குழந்தை பிறந்ததை அறிந்த கம்சன் சினத்துடன் சிறைக்கு வந்தான். தேவகியிடமிருந்த பெண் குழந்தை பிடுங்கி கல்லில் அடிக்க முயன்றான்.

அந்த குழந்தை கம்சன் கைகளில் இருந்து நழுவி ஆகாயத்தில் பிரகாசித்தாள். அக்குழந்தை கம்சனிடம், உன்னை கொல்ல போகிறவன் வேறு ஒரு இடத்தில் பிறந்திருப்பதாக சொல்லி மறைந்தாள்.அதன் பிறகு கம்சன் அனுப்பிய பூதனா அரக்கி, சகடாசூரன், த்ருணாவர்த்தன் உள்ளிட்ட அரக்கர்களை கொன்று, இறுதியில் கம்சனையும் அழித்து உலகை கிருஷ்ணன் காத்தார். கிருஷ்ணன் வளர்ந்து கோபிகைகளின் வீடுகளில் வெண்ணெயை திருடினான். மாடுகளிடம் கன்றுகளை அவிழ்த்துவிட்டு பால் குடிக்க செய்தான். இதன் தத்துவம் என்னவென்றால் பால் போன்ற வெள்ளை உள்ளத்தையே திருடினான் என்பதாகும்.இவ்வாறு, ரங்கஸ்வாமி உபன்யாசம் செய்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X