மேல்நிலைத் தொட்டி மீது ஏறிபோதை வாலிபர் ஆர்ப்பாட்டம்; விருத்தாசலம் அருகே பரபரப்பு

Added : ஆக 06, 2022 | |
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி, போதை வாலிபர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள 1.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின்
மேல்நிலைத் தொட்டி மீது ஏறிபோதை வாலிபர் ஆர்ப்பாட்டம்; விருத்தாசலம் அருகே பரபரப்பு

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி, போதை வாலிபர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள 1.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.கடந்த வாரம் முழுவதும் குடிநீர் சேறும், சகதிமாக குடிப்பதற்கு லாயக்கற்ற நிலையில் வந்தது.

இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த சுமை துாக்கும் தொழிலாளி பரமசிவம், 30, என்பவர் நேற்று காலை 10:00 மணியளவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி, சுத்தமான குடிநீர் வழங்க கோரி திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்து வந்த விருத்தாசலம் தீயணைப்பு நிலைய அலுவலர் மணிவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மேல்நிலை தொட்டி மீது ஏறி அவரை மீட்க முயன்றபோது, அவர் மயங்கி கிடந்தார்.

அதைத்தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு மேல்நிலை தொட்டி மீது முதலுதவி அளிக்கப்பட்டது.பின், அவரை ஸ்ட்ரெச்சரில் வைத்து கட்டி, இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின் கயிறு மூலம் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் கீழே இறக்கினர்.மயக்கம் தெளிந்த அவரிடம், கம்மாபுரம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. அதையடுத்து அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X