பெண் தாசில்தாருக்கு தண்டனை; மாலை வரை கோர்ட்டில் அமர உத்தரவு

Updated : ஆக 06, 2022 | Added : ஆக 06, 2022 | கருத்துகள் (26) | |
Advertisement
சென்னை : அவமதிப்பு வழக்கில், மாலை வரை நீதிமன்றத்தில் இருக்கும்படி, பெண் தாசில்தாருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அவரும், நீதிமன்ற அறைக்கு வெளியில், மாலை வரை இருந்தார்.திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தாலுகா, கடலடி கிராமத்தில், பொதுப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, முருகன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017ல் வழக்கு
பெண் தாசில்தார்,  சென்னை உயர் நீதிமன்றம் , கலசப்பாக்கம் தாசில்தார், தாசில்தார் லலிதா,  women Tahsildar, Chennai High Court, Kalaspakkam Tahsildar, Tahsildar Lalita,


சென்னை : அவமதிப்பு வழக்கில், மாலை வரை நீதிமன்றத்தில் இருக்கும்படி, பெண் தாசில்தாருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அவரும், நீதிமன்ற அறைக்கு வெளியில், மாலை வரை இருந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தாலுகா, கடலடி கிராமத்தில், பொதுப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, முருகன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017ல் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 12 வாரங்களில் மனுதாரரின் மனுவை பரிசீலித்து, உத்தரவு பிறப்பிக்கும்படி, கலசப்பாக்கம் தாசில்தாருக்கு உத்தரவிட்டது.


latest tamil news2017 டிசம்பரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதை அமல்படுத்தவில்லை என, உயர் நீதிமன்றத்தில், 2018ல் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.நான்கு வாரங்களில் உத்தரவை அமல்படுத்துவதாக, அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அமல்படுத்தவில்லை.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட தாசில்தாரை குற்றவாளி என அறிவித்து, தண்டனை விபரத்தை அறிவிக்க, நீதிமன்றத்தில் ஆஜராக, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

தாசில்தார் லலிதா, நீதிபதிகள் முன் ஆஜரானார்.தாசில்தார் சார்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, ''ஆக்கிரமிப்புகளை மூன்று வாரங்களில் அகற்றி, அறிக்கை தாக்கல் செய்கிறோம். சிறை தண்டனை விதித்தால், சமூகத்தில் அவருக்கும், குடும்பத்தினருக்கும் ஏற்படும் நிலையை, நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்.''சிறிய அளவில் வேண்டுமானால் தண்டனை கொடுங்கள்,'' என்றார்.

தாசில்தார் லலிதாவும், கண்ணீர் மல்க நின்றார். இதையடுத்து, பெண் தாசில்தாருக்கு சிறை தண்டனை விதிக்காமல், நீதிமன்ற நேரம் முடியும் வரை, அங்கேயே இருக்கும்படி, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. நீதிமன்ற அறைக்கு வெளியில் உட்கார, அவருக்கு இருக்கை வழங்கப்பட்டது.

மூன்று வாரங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அறிக்கை தாக்கல் செய்யவும், முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருப்பதற்கு, பெரும்பாலும் ஊழல் தான் முக்கிய காரணம் எனவும், முதல் பெஞ்ச் கண்டனம் தெரிவித்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-ஆக-202215:33:06 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் சனநாயகத்தின் அனைத்து தூண்களும் ஒன்று பட்டு மக்களை சுரண்டுகிறார்கள். இந்த உண்மை நம்மில் பலருக்குப் புரியவில்லை .
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
07-ஆக-202215:23:33 IST Report Abuse
Barakat Ali ரொம்ப கஷ்டமான தண்டனையா இருக்கே..... கொஞ்சம் பார்த்து போட்டு குடுக்கக் கூடாதா ?
Rate this:
Cancel
06-ஆக-202220:40:15 IST Report Abuse
தியாகராஜன் இந்தியால அதுவும் தமிழ் நாட்டில் அரசு ஊழியர்களுக்கு இந்த மாதிரி மிருதுவான ஜாலியான தண்டனைகள் தான் கிடைக்கும். இதற்கு பதில் ஏதோ ரஜினி படத்தில் வருவது போல அந்த அரசு ஊழியரிடம் ஒரு கோடி ரூபாய் கொடுத்து இரவுக்குள் செலவு பண்ணச் சொல்லி மிக பயங்கரமான இந்திய அரசு ஊழியர்கள் பயந்து நடுங்கும் படியான கொடுமையான தண்டனையாக கொடுக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X