போதை ஊசி பழக்கத்தில் விடுபட சென்னையில் சிறப்பு மையம்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில், போதை ஊசி பழக்கத்தில் இருந்து விடுபடுதற்கான, 'ஒப்பியாய்டு' மாற்று சிகிச்சை மையத்தை, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில், ரேஷன் கார்டு மற்றும் வருமான சான்றிதழ் இல்லாமல், 520 பேருக்கு, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டையை, அமைச்சர் சுப்பிரமணியன்

கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில், போதை ஊசி பழக்கத்தில் இருந்து விடுபடுதற்கான, 'ஒப்பியாய்டு' மாற்று சிகிச்சை மையத்தை, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில், ரேஷன் கார்டு மற்றும் வருமான சான்றிதழ் இல்லாமல், 520 பேருக்கு, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டையை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று வழங்கினார்.பின், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி: கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பாகம், 1794ல் துவங்கப்பட்டு, தற்போது 1,800 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய மனநல காப்பகமாக உள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயண கட்டண சலுகை, மிகவும் ஏழ்மையான சூழலில் வாழ்பவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய், சமூக நலத் துறையால் வழங்கப்படுகிறது. மன வளர்ச்சி குன்றியோர்களுக்கு 1,500 ரூபாய் உதவி தொகை வழங்கப்படுகிறது.இந்திய அளவில், தமிழகத்தில் தான் அனைத்து மாவட்டங்களிலும், மன நல திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஆதரவற்ற மனநோயாளிகளை மீட்டு சிகிச்சை அளிக்கும் வகையில், 13 சிகிச்சை பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.முதல்வர் காப்பீட்டு திட்டத்தில், தமிழகத்தில் 1.40 கோடி குடும்பங்கள் பயனாளிகளக சேர்க்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு மாதம் 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடாக வழங்கப்படுகிறது. அவர்களுடன், 520 பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துடன் இணைந்து, தமிழகத்தில் முதன்முறையாக, 'ஒப்பியாய்டு' மாற்று சிகிச்சை மையம் துவங்கப்பட்டுள்ளது. இந்த மையம், போதை ஊசியால் உண்டாகும் பாதிப்புகளை குறைத்து, வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும்.இவ்வாறு அவர் கூறினார்.

அரசு மனநல காப்பகத்தின் இயக்குனர் பூர்ணசந்திரிகா கூறியதாவது:'ஒப்பியாய்டு' மாற்று சிகிச்சை மருத்துவம் என்பது, மாத்திரை சிகிச்சை முறை. போதை ஊசி போட்டு கொள்பவர்கள், அவற்றில் இருந்து விடுபட, இரண்டு ஆண்டுகள், மாத்திரையை உட்கொள்ள வேண்டும். ஒரே போதை ஊசியை, நான்கு முதல் 5 பேர் வரை கூட்டாக போட்டு கொள்வதால், அவர்களுக்கு எச்.ஐ.வி., நோய் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்த சிகிச்சையின் வாயிலாக, அதையும் தடுக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் செந்தில்குமார், சுகாதார அமைப்பு திட்ட இயக்குனர் உமா, மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குனர் ஹரிஹரன், மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X