பன்னீர்செல்வம் வழக்கு: புதிய நீதிபதியை நியமித்து உத்தரவு

Added : ஆக 06, 2022 | |
Advertisement
அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் தொடர்பான, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து மனுக்களை, புதிதாக விசாரிக்க, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை நீதிபதிக்கு, உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அனுப்பிய பரிந்துரையை அடுத்து, புதிய நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த மாதம் 11ம் தேதி, பழனிசாமி தரப்பினர் அ.தி.மு.க., பொதுக்குழுவை கூட்டினர்.

அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் தொடர்பான, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து மனுக்களை, புதிதாக விசாரிக்க, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைமை நீதிபதிக்கு, உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அனுப்பிய பரிந்துரையை அடுத்து, புதிய நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த மாதம் 11ம் தேதி, பழனிசாமி தரப்பினர் அ.தி.மு.க., பொதுக்குழுவை கூட்டினர். இதற்கு தடை கோரி, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.மனுக்களை விசாரித்த, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, பொதுக்குழு நடப்பதற்கு தடை விதிக்க மறுத்து, மனுக்களை தள்ளுபடி செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பன்னீர்செல்வம், வைரமுத்து தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொதுக்குழு விவகாரம் தொடர்பாக, உயர் நீதிமன்றமே விரைந்து முடிவெடுக்கவும், இரண்டு வாரங்களில் வழக்கை பைசல் செய்யவும் உத்தரவிட்டது.இதையடுத்து, இந்த வழக்குகள், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன், விசாரணைக்கு வந்தன.

பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'ஜூலை 11ல் பிறப்பித்த உத்தரவில், பன்னீர்செல்வத்துக்கு எதிராக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்ற, தலைமை நீதிபதியிடம் கோரியுள்ளோம்' என்றார்.அதைத் தொடர்ந்து, 'உங்கள் நடவடிக்கை, நீதித் துறையை களங்கபடுத்துவதாக, தரம் குறைப்பதாக உள்ளது' என, நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். விசாரணையை, 5ம் தேதிக்கு தள்ளி வைத்திருந்தார்.

வழக்கு, நேற்று பிற்பகல் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன், விசாரணைக்கு வந்தது. பன்னீர்செல்வம் தரப்பில், மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, தலைமை நீதிபதிக்கு அனுப்பிய மனுவை வாபஸ் பெறுவதாக, பதிவுத் துறையில் அளித்த கடிதத்தை தாக்கல் செய்தார். நீதிபதிக்கு எதிராக தனிப்பட்ட முறையில், எந்த குற்றச்சாட்டையும் கூறவில்லை எனவும், மூத்த வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், 'இந்த நீதிமன்றத்தின் மீது, எங்களுக்கு நம்பிக்கை உள்ளது; ஏற்கனவே, இரண்டு முறை இந்த வழக்கை விசாரித்து, உத்தரவுகள் பிறப்பித்திருப்பதால், புதிதாக ஒருவர் விசாரிப்பதற்காக, தலைமை நீதிபதிக்கு மனு அனுப்பப்பட்டது' என்றார். இந்த நீதிமன்றத்தை அணுகி, வேண்டுகோள் விடுப்பதற்கு பதில், தலைமை நீதிபதியை வழக்கறிஞர் அணுகியதற்காக, மூத்த வழக்கறிஞர் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

எதிர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், எந்த நீதிபதி முன்னும் ஆஜராகி வாதாட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். எனவே, இரண்டு முறை இந்த வழக்கை விசாரித்து, உத்தரவுகள் பிறப்பித்திருப்பதாலும், தற்போது தான் இந்த கோரிக்கை வைக்கப்பட்டதாலும், தலைமை நீதிபதியின் பரிசீலனைக்காக, இதை முன்வைக்கிறேன். புதிதாக இந்த வழக்குகளை விசாரிக்க, ஒரு நீதிபதியை நியமிக்க, உரிய உத்தரவுகள் பிறப்பிப்பதற்காக, தலைமை நீதிபதி முன், இந்த வழக்கு ஆவணங்களை பதிவுத் துறை சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவைத் தொடர்ந்து, பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரனை நியமித்து, தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி உத்தரவிட்டுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X