டோர்ன்டு ஜீன்ஸில் கலக்கும் ஆலியா பட்

Updated : ஆக 06, 2022 | Added : ஆக 06, 2022 | |
Advertisement
நவநாகரிக உலகில் 'டிசாஸ்டர், டிஸ்ட்ரஸ்டு மற்றும் டோர்ன் ஜீன்ஸ்' என்ற ஆங்காங்கு கிழிந்த ஜீன்ஸை அணிபவர்கள் அதிகரித்து வருகின்றனர். குறிப்பாக இதை அணியாத கோலிவுட், பாலிவுட் பிரபலங்களே இல்லை எனலாம். நடிகைகள் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே, அனுஷ்கா சர்மா, ஆலியா பட், நயன்தாரா, ராஷ்மிகா மந்தனா உட்பட பலரும் இதை அணிந்து உலா வருகின்றனர். இதற்கேற்ப பேஷன் உலகில் விதவிதமாக
பேஷன், டிசாஸ்டர்ஜீன்ஸ், டோர்ன்ஜீன்ஸ், ஜீன்ஸ், ஆலியாபட், பாலிவுட் நடிகை, பேஷன் உடைகள், alia bhat, fashion, fashiondress, tornedjeans, distressed jeans, disasterjeans

நவநாகரிக உலகில் 'டிசாஸ்டர், டிஸ்ட்ரஸ்டு மற்றும் டோர்ன் ஜீன்ஸ்' என்ற ஆங்காங்கு கிழிந்த ஜீன்ஸை அணிபவர்கள் அதிகரித்து வருகின்றனர். குறிப்பாக இதை அணியாத கோலிவுட், பாலிவுட் பிரபலங்களே இல்லை எனலாம். நடிகைகள் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே, அனுஷ்கா சர்மா, ஆலியா பட், நயன்தாரா, ராஷ்மிகா மந்தனா உட்பட பலரும் இதை அணிந்து உலா வருகின்றனர். இதற்கேற்ப பேஷன் உலகில் விதவிதமாக கிழிந்த ஜீன்ஸ்கள் வடிவமைக்கப்படுகின்றன.



latest tamil news



சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் தன் இன்ஸ்ட்டா பக்கத்தில் டோர்ன்டு ஜீன்ஸை அணிந்தவாறு கியூட்டான போஸில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக் குவித்துள்ளனர். இதில், இவர் அணிந்துள்ள ஜீன்ஸ் கிழிந்தாற்போல் இருப்பது மட்டுமின்றி ஆங்காங்கே நூல்கள் கொத்தாக தொங்குவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப அணிந்துள்ள வெள்ளை நிற காலர் பட்டன் சட்டை ஸ்டைலிஷான மற்றும் ரிச் லுக்கைத் தருகிறது.


latest tamil news


டிரெண்டிங்காக மட்டுமின்றி இவரின் பேவரைட் உடையாகவும் இது இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால், போட்டோ சூட்டுக்காக மட்டுமின்றி ஆலியாபட் வெளியிடங்களுக்கு செல்லும் போதும் இந்த கிழிந்த ஜீன்ஸ் உடைகளையே அவ்வப்போது அணிவது குறிப்பிடத்தக்கது. ஆலியா தற்போது கர்ப்பமாக உள்ள நிலையிலும், அதற்கேற்ப உடைக்கும் முக்கியத்துவம் அளிக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம் நடிகைகளுக்கு 'டப்' கொடுக்கும் வகையில் குஷ்பூவும் இந்த கிழிந்த ஜீன்ஸ், டி சர்ட்டில் கியூட்டான புகைப்படங்களை பதிவிட்டு டிரெண்டிங் ஆனது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X