அறிக்கையும், ஆய்வும் தேவை இல்லை: உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி

Added : ஆக 06, 2022 | |
Advertisement
''அ.தி.மு.க., ஆட்சியில், கொள்முதல் சிறப்பாக செய்திருந்தால், அறிக்கை விட வேண்டிய அவசியமும், ஆய்வு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை,'' என, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்.தஞ்சாவூர் மாவட்டம், முன்னையம்பட்டியில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கை, நேற்று ஆய்வு செய்த அவர் கூறியதாவது: தமிழகத்தில், 103 திறந்தவெளி சேமிப்பு கிடங்கு உள்ளது. முதல் கட்டமாக, 30 கோடி கிலோ

''அ.தி.மு.க., ஆட்சியில், கொள்முதல் சிறப்பாக செய்திருந்தால், அறிக்கை விட வேண்டிய அவசியமும், ஆய்வு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை,'' என, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

தஞ்சாவூர் மாவட்டம், முன்னையம்பட்டியில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கை, நேற்று ஆய்வு செய்த அவர் கூறியதாவது: தமிழகத்தில், 103 திறந்தவெளி சேமிப்பு கிடங்கு உள்ளது. முதல் கட்டமாக, 30 கோடி கிலோ அளவிலான நெல்வைக்கும் செமி குடோன் அமைக்க, 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.நேரடி கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்து, திறந்தவெளி சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லாமல், அரவை ஆலைகளுக்கு அனுப்பும் திட்டத்தையும், அரசு பரிசீலனை செய்து வருகிறது.

முன்னையம்பட்டி, உளுந்துார்பேட்டையில் இருந்த, 2.60 கோடி கிலோவில், 1.60 கோடி கிலோ நெல் அரவைக்காக அனுப்பப்பட்டது. இன்னும், 1 கோடி கிலோ ஒரு வாரத்திற்குள், அரிசி ஆலைகளுக்கு அனுப்ப உள்ளோம்.நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், எந்ததவறும் நடக்கக்கூடாது என்பதற்காக, புகார்பெட்டி அமைக்கபட்டு, வாரம் ஒரு முறை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். செப்., 1ம் தேதி, நெல் கொள்முதல் துவங்க தார்பாய்கள், சாக்கு, சணல் தேவையான அளவு கையிருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆட்சியில், 378 அரவை ஆலைகள் மட்டுமே இருந்தன. இந்திய உணவு கழகம், 106 இடங்களில் கறுப்பு, பழுப்பு நீக்கும் கருவி பொருத்த வேண்டும் என, அறிவுறுத்தி இருந்தது. ஆனால், அவர்கள் பொருத்தவில்லை.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், 637 தனியார் அரவை ஆலைகளாகவும், நுகர்பொருள் வாணிபக் கழக அரவை ஆலைகள், 21 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதில், 658 ஆலைகளில் கறுப்பு, பழுப்பு நீக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்திய உணவு கழகம் சொல்வதை நடைமுறைப்படுத்தியது தி.மு.க., தான்.அ.தி.மு.க., ஆட்சியில், கொள்முதல் நிலையங்களை சிறப்பாக செயல்படுத்தி இருந்தால், முன்னாள் முதல்வர் பழனிசாமி அறிக்கை விட வேண்டிய அவசியம் இல்லை; நானும் ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X