திரிசூர்: கேரள மாநிலம் திரிசூர் மாவட்டத்தில், நடுக்காட்டில் மழையில் சிக்கிக் கொண்டிருந்த மூன்று கர்ப்பிணிகளை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.
கேரளாவில் கடந்த ஜூன் 1ம் தேதி தென்மேற்கு பருவ மழை துவங்கியது. முதல் இரண்டு வாரங்களுக்கு லேசான மழை பெய்ந்தது. பின் கடந்த சில தினங்களாக பருவ மழை தீவிரமடைந்தது. இந்நிலையில், இன்று (ஆக.,6) காட்டில் வசித்து வரும் பழங்குடியின மக்களில் மூன்று பெண்கள் கர்ப்பிணிகளாக உள்ளனர். கனமழை பெய்ததால் காடு முழுக்க வெள்ளக்காடானது. இதனால் அங்கி சிக்கிக் கொண்டிருந்த மூன்று கர்ப்பிணிகளையும் வனத்துறையினரும் போலீசாரும் இணைந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே மூன்று கர்ப்பிணிகளில் ஒருவர் வனப்பகுதிக்குள்ளேயே குழந்தையைப் பெற்றெடுத்தார். அவர் மருத்துவமனைக்கு வர மறுத்துவிட்டார். எனவே வனத்துறையினர் அவருக்குத் தேவையான உதவிகளை செய்துகொடுத்துவிட்டு, மற்ற இரண்டு கர்ப்பிணிகளையும் பத்திரமாக மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ஒருவர் ஆறு மாதம் மற்றொருவர் 7 மாத கர்ப்பிணியாக உள்ளனர்.
இவர்களை பெரிங்கல்குத் அணைக்கட்டைத் தாண்டி, படகு வழியாக, மிகப்பெரிய சவலான பாதையைக் கடந்து கர்ப்பிணிகளை மீட்கப்பட்டுள்ளனர். தீவிர முயற்சி ஈடுப்பட்டு கர்ப்பிணிகளை மீட்ட அதிகாரிகளுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.