கருணாநிதி நினைவிட பணி: முதல்வர் ஆலோசனை

Added : ஆக 06, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
கருணாநிதி நினைவிட கட்டுமான பணிகள் குறித்து, பொதுப்பணித் துறையினருடன், முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, சென்னை மெரினாவில் நினைவிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக அரசு, 38 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. நினைவிடத்தின் ஒருபகுதியாக, பேனா வடிவ சிலை கடலில் நிறுவப்பட உள்ளது. இதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி

கருணாநிதி நினைவிட கட்டுமான பணிகள் குறித்து, பொதுப்பணித் துறையினருடன், முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, சென்னை மெரினாவில் நினைவிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக அரசு, 38 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. நினைவிடத்தின் ஒருபகுதியாக, பேனா வடிவ சிலை கடலில் நிறுவப்பட உள்ளது. இதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி கோரப்பட்டுள்ளது; அனுமதி பெறுவதில் இழுபறி நீடிக்கிறது.

இந்நிலையில், நினைவிட கட்டுமானம் குறித்து, பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகளுடன், முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினர். கருணாநிதி நினைவு தினத்தை ஒட்டி, நாளை ஓமந்துாரார் தோட்டத்தில் உள்ள அவரது சிலையில் இருந்து நினைவிடத்திற்கு பிரமாண்ட பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

'பேரணியில் வரும் கூட்டத்தால், நினைவிட கட்டுமானங்கள் சேதம் அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக சில இடங்களில் தடுப்புகளை வைத்து, தொண்டர்களை அப்பகுதிக்கு செல்லாமல் கட்டுப்படுத்த வேண்டும்' என, பொதுப்பணித் துறையினருக்கு, முதல்வர் உத்தரவிட்டார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yogeshananda - Erode,இந்தியா
06-ஆக-202213:44:12 IST Report Abuse
Yogeshananda திருட்டு ரயில் ஏறி வந்த டிக்கட்டிற்கு ஒரு நினைவுச் சின்னம் நிறுவுவதற்கான திட்டம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X