காலை உணவை தவிர்த்தாலே உடல் எடையைக் குறைக்கலாம் என்பது பலரின் எண்ண்ம். இதனால் உடல் ஆரோக்கியத்தை இழக்க வேண்டியுள்ளது. ஊட்டச்சத்துகள் அதிகமுள்ள உடல் எடையை குறைக்கும் பொருட்களை எடுத்தாலே ஆரோக்கியமாக உடல் எடையை குறைக்கலாம். கொள்ளு, சியா விதைகள், பட்டை உட்பட பல்வேறு உணவுப்பொருட்கள் உடல் எடைக்குறைப்பில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இதில், சியா புட்டிங் செய்யும் வழிமுறைகளைப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முந்திரிப்பருப்பு - 15
சியா விதைகள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
நாவல் பழம் - 4
சூரியகாந்தி விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்
எப்படிச் செய்வது?
![]()
|
10 முந்திரிப் பருப்புகளை ஒரு மணி நேரம் ஊறவைத்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்தால் முந்திரிப் பால் ரெடி. இதில் 1/2 டம்ளர் தண்ணீர் மற்றும் சியா விதைகளை கலக்கி பிரிட்ஜில் வைக்கவும். மறுநாள் காலையில் இந்த விதைகள் முந்திரிப்பாலில் நன்றாக ஊறி சிறிது கெட்டியான பதத்தில் இருக்கும். இதில் முதல் நாள் இரவில் ஊறவைத்த சூரியகாந்தி விதைகள், நறுக்கிய நாவல் பழம், நறுக்கிய முந்திரி ஆகியவற்றை சேர்த்தால் காலை உணவுக்கு சாப்பிட ஆரோக்கியமான, சுவையான சியா புட்டிங் ரெடி.
இதேப்போல் முந்திரிப்பாலில் ஊறவைத்த சியாவிதை கலவையில் சிறிது ஏலக்காய் பொடியை கலக்கிக் கொள்ளவும். பின்னர், அந்தந்த சீசனுக்கேற்ப ஏதாவது ஒரு நறுக்கிய பழத்துடன், ஊறவைத்த பூசணி விதைகளை சேர்த்து சாப்பிடலாம்.
![]()
|
சியா விதைகளில் கால்சியம், மெக்னீசியம், ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துகள் இருக்கிறது. பால் பொருட்களை தவிர்ப்பவர்கள் கால்சியம் சத்து பெற இது உதவியாக இருக்கும். இதிலுள்ள புரதச்சத்து பசி உணர்வைக் கட்டுப்படுத்துகிறது. இதனால், ஸ்நாக்ஸ் மற்றும் அதிகப்படியான உணவு சாப்பிடுவது தவிர்க்கப்படுவதால், ஆரோக்கியமுடன் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கிறது.
சூரிய காந்தி விதைகள் உடலில் கொழுப்புகளை கரைத்து மெட்டாபாலிசத்தை அதிகரிப்பதால் இதயம் தொடர்பான நோய்கள் தவிர்க்கப்படுகின்றன. இது புற்றுநோய் செல்களின் வீரியத்தை குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதேபோல் முந்திரிப்பருப்பை அளவாக சாப்பிடும்போது உடல் எடையை குறைக்க உதவுவதாக ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எலும்புகளை வலிமைப்படுத்துகிறது. இதிலுள்ள தாமிரம், மக்னீசியம், ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.