புதிய கார் வாங்கப் போறீங்களா? இந்த தகவலை தெரிந்துகொள்ளுங்கள்

Updated : ஆக 06, 2022 | Added : ஆக 06, 2022 | |
Advertisement
இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை செமிகண்டக்டர்கள் பற்றாக்குறையால் விலை உயர்வு பிரச்னையை சந்தித்தன. இருப்பினும் தொடர்ச்சியான புதிய கார் அறிமுகங்களால் விற்பனை அதிகரித்துள்ளது. வழக்கம் போல் அதிகம் விற்பனையான கார்கள் பட்டியலில் மாருதி சுசூகி நிறுவனமே பெரும்பாலான இடங்களை பிடித்துள்ளது. அதிகம் விற்பனையான 5 கார்களை பற்றி பார்ப்போம்.வேகன் ஆர் விற்பனைப்
Top_Selling_Cars, Maruti, Wagon_R, Baleno, Swift, Nexon, Dzire

இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை செமிகண்டக்டர்கள் பற்றாக்குறையால் விலை உயர்வு பிரச்னையை சந்தித்தன. இருப்பினும் தொடர்ச்சியான புதிய கார் அறிமுகங்களால் விற்பனை அதிகரித்துள்ளது. வழக்கம் போல் அதிகம் விற்பனையான கார்கள் பட்டியலில் மாருதி சுசூகி நிறுவனமே பெரும்பாலான இடங்களை பிடித்துள்ளது. அதிகம் விற்பனையான 5 கார்களை பற்றி பார்ப்போம்.


வேகன் ஆர்


latest tamil news



விற்பனைப் பட்டியலில் சில மாதங்களாக மாருதியின் 'வேகன் ஆர்' முதலிடத்தில் உள்ளது. ஜூலை மாதம் இந்த கார் 22,588 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. இருப்பினும் ஜூலை 2021 உடன் ஒப்பிடும் போது ஒரு சதவீத அளவு சரிவைச் சந்தித்துள்ளது. இதன் டால்பாய் லுக் ஓட்டுவதற்கு வசதியாகவும், அதிக உட்புற இடவசதியுடன் இருப்பதால் பலர் இதனை விரும்புகின்றனர். சி.என்.ஜி., வகையும் இதில் கிடைக்கிறது. அபாரமான இதன் மைலேஜ் இந்திய குடும்பங்களின் முதல் விருப்பமாக உள்ளது. இதன் சென்னை எக்ஸ் ஷோரூம் விலை: ரூ.5.47 லட்சத்திலிருந்து ஆரம்பிக்கிறது


பலேனோ



latest tamil news


Advertisement

மாருதி சுசூகியின் பிரீமியம் ஹேட்ச்பேக் காரான பலேனோ ஜூலை மாத அதிக விற்பனையான கார்கள் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. 17,960 யூனிட் விற்பனையை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 14,729 யூனிட் மட்டுமே விற்பனையாகி இருந்தது. கடந்த பிப்ரவரியில் பலேனோ தோற்றத்தை மெருகேற்றி, வசதிகள் சிலவற்றை கூட்டி பேஸ்லிப்ட்டை வெளியிட்டது. அது வாடிக்கையாளர்களை கவர்ந்ததால் விற்பனை கூடியுள்ளது. இதன் சென்னை எக்ஸ் ஷோரூம் விலை: ரூ.6.4 லட்சத்திலிருந்து தொடக்கம்


ஷிப்ட்




latest tamil news


ஒரு காலத்தில் நகரச் சாலைகளை அதிகம் ஆக்கிரமித்திருந்த காராக ஷிப்ட் இருந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தை காட்டிலும் தற்போது விற்பனை சுமார் 5 சதவீத அளவு சரிந்து 17,539 யூனிட்டாக உள்ளது. இருப்பினும் அதிகம் விற்பனையான கார்களில் 3ம் இடத்தில் ஷிப்ட் உள்ளது. டுயல் ஜெட் என்ஜின் இருப்பதால் அதிக டார்க் உருவாக்கும். இதனால் ஓட்டுதல் தரம் சிறப்பாக இருக்கும். நெடுஞ்சாலைகளில் லிட்டருக்கு 20 கிலோமீட்டர் அளவு மைலேஜ் கிடைக்கும். இதன் சென்னை எக்ஸ் ஷோரூம் விலை: ரூ.5.91 லட்சத்திலிருந்து தொடக்கம்


டாடா நெக்ஸான்



latest tamil news


இந்த டாப் 5 பெஸ்ட் செல்லர் கார்களில் உள்ள ஒரே மாருதி அல்லாத மாடல் என்றால் அது டாடாவின் நெக்சான் தான். 14,214 யூனிட்களை விற்று இப்பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது இந்த காம்பாக்ட் எஸ்.யூ.வி., கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது விற்பனை 38 சதவீதம் அதிகரித்துள்ளது. டாடா நெக்சான் எலெக்ட்ரிக் மாடலிலும் உள்ளது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் ஏற்றினால் சுமார் 280 கிலோமீட்டர் செல்லும் திறன் கொண்டது. பாதுகாப்பு அம்சத்திலும் 5 ஸ்டார் என்கேப் ரேட்டிங்குடன் சிறந்து விளங்குகிறது. இதன் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை: ரூ.7.5 லட்சத்திலிருந்து தொடக்கம்


மாருதி டிசையர்



latest tamil news


காம்பேக்ட் செடான் மாடலான டிசையர் நாட்டில் அதிகம் விற்பனையாகும் கார்களில் 5ம் இடத்தில் உள்ளது. ஜூலையில் 13,747 யூனிட்கள் விற்பனை ஆகியுள்ளது. 2021ல் இதே காலக்கட்டத்தில் 10,470 யூனிட்களே விற்றிருந்தன. மார்ச் மாதத்தில், மாருதி சுசுகி டிசையர் சி.என்.ஜி., மாடலை வெளியிட்டது. Vxi மற்றும் Zxi ஆகிய இரு வகைகளில் சி.என்.ஜி., கிடைக்கின்றன. பெட்ரோலுடன் ஒப்பிடும் சி.என்.ஜி., மாடல் விலை சுமார் 2 லட்ச ரூபாய் அதிகம். இதன் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை: ரூ.6.24 லட்சத்திலிருந்து தொடங்குகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X