விநாயகர் கோவில் தொடர வக்கீல்கள் கூட்டத்தில் முடிவு

Added : ஆக 06, 2022 | |
Advertisement
'திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலை அகற்ற வேண்டாம்' என, வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டையில், ஒருங்கிணைந்த நீதிமன்றம் திறப்பு விழாவின் போது, நுழைவாயில் அருகே புதிதாக விநாயகர் கோவில் கட்டப்பட்டது.இதற்கு, வழக்கறிஞர் பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்து,

'திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலை அகற்ற வேண்டாம்' என, வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டையில், ஒருங்கிணைந்த நீதிமன்றம் திறப்பு விழாவின் போது, நுழைவாயில் அருகே புதிதாக விநாயகர் கோவில் கட்டப்பட்டது.இதற்கு, வழக்கறிஞர் பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்து, கோவிலை அகற்ற வேண்டும் என சென்னை, ஐகோர்ட்டுக்கு மனு அனுப்பினார்.

அதன்படி, கடந்த ஆண்டு, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதி தலைமையில் வழக்கறிஞர்கள் கருத்து கேட்புக்கூட்டம் நடந்தது.இந்நிலையில் நேற்று, திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராஜாராமன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

செயலர் ரமேஷ், அட்வகேட் அசோசியேஷன் தலைவர் விஜயன், செயலர் மகேந்திரன், வழக்கறிஞர் நலச் சங்கத் தலைவர் மோகன்ராஜ், செயலர் கிருபாகரன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், 'நீதிமன்ற வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலை அகற்ற வேண்டாம்' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X