வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி:டில்லியில் கலால்துறை அதிகாரிகள் 11 பேரை சஸ்பெண்ட் செய்து கவர்னர் வினய்குமார் சாக்சேனா உத்தரவிட்டுள்ளார்.

ஆம் ஆத்மி ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் மது ஆயத்தீர்வை துறையில் சில மாற்றங்கள் கொண்டு வந்தன, மேலும் கலால் துறையில் மது விற்பனை ஆலைகளுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டன. மது பான விடுதிகள் திறப்பில் விதி மீறல் என பல புகார்கள் எழுந்தன. இது குறித்து முழு விசாரணை நடத்த அனுமதி அளித்ததுடன் சிபிஐ விசாரணைக்கும் பரிந்துரை செய்தார். இதில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது கிரிமினல் நடவடிக்கை தொடர வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் மது ஆயத்தீர்வையில் பழைய முறையையே தொடரப்போவதாக அறிவித்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மது பான விற்பனை லைசென்ஸ் உரிமம் நீட்டிப்பிற்கு கவர்னர் அனுமதி அளித்தார். ஆனால் இன்று கலால் துறையில் கமிஷனர் உள்பட 11 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். ஆம் ஆத்மி கொண்டு வந்த ஆயத்தீர்வை துறை சட்ட மாற்றங்களை அமல்படுத்த இந்த அதிகாரிகள் காரணமாக இருந்துள்ளனர் என கூறப்படுகிறது. இது டில்லியில் ஆம்ஆத்மி அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.