கள்ளக்காதலியை கொன்ற முதியவருக்கு ஆயுள் சிறை

Added : ஆக 06, 2022 | |
Advertisement
கரூர்: பாலவிடுதி அருகே, கள்ளக்காதலியை வெட்டி கொன்ற முதியவருக்கு, ஆயுள் சிறை தண்டனை விதித்து, கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கரூர் மாவட்டம், பாலவிடுதி சேவாப்பூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி, 72. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பழனியம்மாள், 53, என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது.கடந்த, 2021 ஆகஸ்டில் பழனியம்மாளின் வீட்டில், அவரது உறவினர்கள் கொழுந்தாயி,

கரூர்: பாலவிடுதி அருகே, கள்ளக்காதலியை வெட்டி கொன்ற முதியவருக்கு, ஆயுள் சிறை தண்டனை விதித்து, கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கரூர் மாவட்டம், பாலவிடுதி சேவாப்பூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி, 72. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பழனியம்மாள், 53, என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது.கடந்த, 2021 ஆகஸ்டில் பழனியம்மாளின் வீட்டில், அவரது உறவினர்கள் கொழுந்தாயி, சங்கர் ஆகியோர் தங்கியுள்ளனர்.அப்போது, அங்கு சென்ற ராமசாமிக்கும், பழனியம்மாளுக்கும் இடையே, இவர்களை எப்படி வீட்டில் தங்க வைக்கலாம் என, தகராறு ஏற்பட்டது.

அதில், ஆத்திரமடைந்த ராமசாமி, அரிவாளால் பழனியம்மாளை, வெட்டி கொலை செய்து விட்டு தப்பினார்.தகவலறிந்த, அப்போதைய பாலவிடுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, ராமசாமியை கைது செய்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கில், நேற்று, தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், பழனியம்மாளை வெட்டி கொலை செய்த, ராமசாமிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 100 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி நசீமாபானு உத்தரவிட்டார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X