கூட்டுறவு சங்கத்தில் மோசடி2 ஊழியர்கள் 'சஸ்பெண்ட்'

Added : ஆக 06, 2022 | |
Advertisement
செய்யாறு:கூட்டுறவு கடன் சங்கத்தில், முதியோர் பணத்தை ஆட்டை போட்ட இரண்டு ஊழியர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், 4,000க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த வாரம், இங்கு பணம் 'டிபாசிட்' செய்த மூத்த குடிமக்களில் ஒருவர், சொந்த செலவுக்கு பணம் எடுக்க சென்றார். அப்போது, அவர்

செய்யாறு:கூட்டுறவு கடன் சங்கத்தில், முதியோர் பணத்தை ஆட்டை போட்ட இரண்டு ஊழியர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், 4,000க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த வாரம், இங்கு பணம் 'டிபாசிட்' செய்த மூத்த குடிமக்களில் ஒருவர், சொந்த செலவுக்கு பணம் எடுக்க சென்றார். அப்போது, அவர் வழங்கப்பட்ட ஆவணத்தில் உள்ள தொகைக்கும், அலுவலகத்தில் உள்ள ஆவணத்தில் உள்ள தொகைக்கும் வித்தியாசம் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து, கூட்டுறவுத்துறை மாவட்ட பதிவாளர் கல்யாணகுமாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.அவர் ஆய்வு நடத்தியதில், டிபாசிட் செய்யப்பட்டுள்ள பணத்தில், முறைகேடு நடந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து, திருவத்திபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலர் சேதுராமன், எழுத்தர் விமலா ஆகிய இருவரையும் 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X