தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Updated : ஆக 07, 2022 | Added : ஆக 06, 2022 | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று (ஆக., 6) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.சென்னை வானிலை மையம் இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:மேற்குதிசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர்
தமிழகம், மாவட்டங்கள், கனமழை, மீனவர்கள், சென்னை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று (ஆக., 6) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மேற்குதிசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று (ஆக., 6) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் வட மாவட்டங்கள், புதுச்சேரி , கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


latest tamil news



வட மாவட்டங்கள், புதுச்சேரி , கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் (ஆக.,7,8) தேதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.



மீனவர்களுக்கான எச்சரிக்கை:


கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதே போல் ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.இப்பகுதிகளில் மீனவர்கள் இன்று (ஆக.,6) செல்ல வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X