மனைவியை கொன்ற வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை| Dinamalar

மனைவியை கொன்ற வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை

Added : ஆக 06, 2022 | |
மனைவியை கொலை செய்த வழக்கில், கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.ஈரோடு மாவட்டம் பழமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்மணி, 41; இவரின் மனைவி கருத்திபாளையத்தை சேர்ந்த ஜோதிமணி, 34; இவர்களுக்கு, 2005ல் திருமணம் நடந்தது. ஓராண்டில் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். தமிழ்மணி விவாகரத்து கேட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதை மறுத்த ஜோதிமணி, கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும்

மனைவியை கொலை செய்த வழக்கில், கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பழமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்மணி, 41; இவரின் மனைவி கருத்திபாளையத்தை சேர்ந்த ஜோதிமணி, 34; இவர்களுக்கு, 2005ல் திருமணம் நடந்தது. ஓராண்டில் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். தமிழ்மணி விவாகரத்து கேட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதை மறுத்த ஜோதிமணி, கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என, பதில் மனு தாக்கல் செய்தார். தவிர தமிழ்மணியின் சொத்தில் ஒரு பகுதியில், ஜோதிமணி வசித்து கொள்ள நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஒரே இடத்தில் வசித்த நிலையில், தன்னுடன் சேர்ந்து வாழுமாறு, தமிழ்மணியிடம் வலியுறுத்தி வந்தார். இது தொடர்பாக, 2018 அக்., 18ல் ஏற்பட்ட தகராறில், தமிழ்மணி தள்ளி விட்டதில் ஜோதிமணி இறந்தார். இது தொடர்பாக தமிழ்மணி, அவரது தாய் பழனியம்மாள், 65, தோட்ட தொழிலாளி லோகநாதன், 24, ஆகியோரை, சிவகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு, ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடந்தது.

நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பளித்தார். தமிழ்மணிக்கு ஆயுள் தண்டனை, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். அபராத தொகையை ஜோதிமணியின் தந்தைக்கு வழங்க உத்தரவிட்டார். வழக்கில் இருந்து பழனியம்மாள், லோகநாதன் விடுவிக்கப்பட்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X