சினிமாக்காரர்கள் இடங்களில் ரெய்டு: சிக்கியது கணக்கில் வராத ரூ.200 கோடி

Updated : ஆக 07, 2022 | Added : ஆக 06, 2022 | கருத்துகள் (36) | |
Advertisement
சென்னை: சமீபத்தில் நடந்த ரெய்டில், திரைத்துறையினரின் கணக்கில் வராத ரூ.200 கோடி வருமானத்தை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.சினிமா தயாரிப்பாளர்கள் அன்புச்செழியன், கலைப்புலி தாணு, ஞானவேல்ராஜா, தியாகராஜன் மற்றும் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் வீடுகள், அலுவலகங்களில், வருமான வரித் துறையினர் 4 நாட்களாக அதிரடி 'ரெய்டு' நடத்தினர். சென்னை,
அன்புசெழியன், வருமான வரித்துறை, பணம், நகைகள், தாணு, எஸ்ஆர் பிரபு, கலைப்புலி தாணு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: சமீபத்தில் நடந்த ரெய்டில், திரைத்துறையினரின் கணக்கில் வராத ரூ.200 கோடி வருமானத்தை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

சினிமா தயாரிப்பாளர்கள் அன்புச்செழியன், கலைப்புலி தாணு, ஞானவேல்ராஜா, தியாகராஜன் மற்றும் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் வீடுகள், அலுவலகங்களில், வருமான வரித் துறையினர் 4 நாட்களாக அதிரடி 'ரெய்டு' நடத்தினர். சென்னை, மதுரையில் 40 இடங்களில் சல்லடை போட்டு தேடினர்.


latest tamil newsஇந்த சோதனை தொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கை: சோதனையில், கணக்கில் வராத ரூ.200 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரொக்கம் ரூ.36 கோடி மற்றும் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அன்புச்செழியன் தொடர்புடைய இடங்களில், தியேட்டர் வருமானத்தை குறைத்து காண்பித்து பல கோடி வருமானத்தை மறைத்ததற்கான ஆவணங்கள், பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு கொடுத்த கணக்கில் வராத கடன்கள், பிராமிசரி நோட்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனையின் போது, கணக்கில் காட்டப்படாத பணப்பரிவர்த்தனைகள் மற்றும் முதலீடுகள் தொடர்பான ஆவணங்கள் , டிஜிட்டல் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. ரகசிய மற்றும் மறைத்து வைக்கப்பட்ட சொத்துகளும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
06-ஆக-202221:22:10 IST Report Abuse
sankaranarayanan இதுபோன்று இந்தியாவின் நாங்கு திக்குகளிலும் மத்தியிலும் சோதனை செய்து திரட்டிய பணமே அடுத்த நிதியாண்டிற்கு நிதி பற்றாக்குறையை முழுவதும் சமாளிக்கலாம்.
Rate this:
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
07-ஆக-202217:36:18 IST Report Abuse
MARUTHU PANDIARதமிழ் நாட்டு சினிமா பைனான்சியர்களிடம் பத்து விஜய் மல்லையா, அஞ்சாறு நீரவ் மோடி, பத்து பதினஞ்சு சோக்சி அள்வுக்கு எல்லாம் பல மடங்கு கடந்து பல லட்சம் கோடி புரளுதாம். இந்த மாபியாக்கள் பணம் எல்லாமே முக்கிய அரசியல் புள்ளிகளுடையதாம். அதாவது அன்றும், இன்றும் அதை வைத்து இரண்டு மூன்று நான்கு ஆண்டுக்கு துண்டு விழாத படஜெட் கூட போடலாம் அப்படீங்கராங்க மக்கள். 500,,1000 நோட்டு மதிப்பு ரத்து செய்த கோடிகள் எல்லாம் ஜுஜுபி தான், அதையெல்லாம் தூக்கி சாப்பிடும் லெவலில் இந்த அமவுண்ட் எகிறும்னும் சொல்றாங்க மக்கள்...
Rate this:
Cancel
06-ஆக-202219:12:34 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் ரஃபேல் போர் விமானங்களை வாங்க காங்கிரஸ் ஆட்சியில் 560 கோடிகள் விலைபேசி ஒப்பந்தம் போடப்பட்டது.அந்த ஒப்பந்தத்தை மோடி அரசு ரத்து செய்தது..பிறகு அதே விமானங்களை 1600 கோடி விலை பேசி மோடி அரசு வாங்கி இருக்கிறது.
Rate this:
Velumani K. Sundaram - Victoria,செசேல்ஸ்
06-ஆக-202220:16:19 IST Report Abuse
Velumani K. Sundaram560 கோடிகளுக்கு ஆட்டோ ரிக்ஸ்சா வாங்க இருந்தானுங்க ... இப்போ வாங்கியிருப்பது VOLVO பஸ்... புரியுதா. நம் நாடு இப்போது வாங்கியிருக்கும் Rafael, latest with custom settings. நம்ம more than100 air force captains அங்கே ஆறு மாதங்களுக்குமேல் தங்கி ட்ரைனிங் எடுத்த செலவுக்கு யாரு இத்தாலிக்காரனா pay பண்ணுவான்?...
Rate this:
visu - Pondicherry,இந்தியா
06-ஆக-202221:41:20 IST Report Abuse
visuஇன்னமும் சில நாட்களில் ராகுலும் சோனியாவும் சிறை செல்ல வேண்டும் அதிர்க்காக இப்போ விலை உயர்வுக்கு போராட்டம் என்று போஸ் கொடுக்கிறார்ங்க கைதானால் இந்த போராட்டத்துக்காக கைது என்று குழப்பலாம் . நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சிறை காத்திருக்கிறது பிஜேபி நமக்கேன் வம்பு நீதிமன்றம் சொன்னால் கைது செய்யலாம் என்று காத்திருக்கிறது...
Rate this:
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
07-ஆக-202200:46:53 IST Report Abuse
Fastrackஅவருக்கு விளக்கம் தருவது வேஸ்ட் .....
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48085,யூ.எஸ்.ஏ
06-ஆக-202219:00:33 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN     ஹரியானாவை சார்ந்த தொல் பொருள் ஆராட்சியாளர் ஷா என்பவர் ஹரப்பர் நாகரிகம் பற்றி ஆராட்சி செய்து முடிவில் மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பாக கிடைத்த பொருட்களில் கடவுள் மதம் சம்பந்தமாக எந்த பொருளும் கிடைக்கவில்லை ..மதம் சம்பந்தமாக கிடைத்த அணைத்து பொருட்களும் பிந்தைய காலத்திற்கு உட்பட்டவை .என்று முடிவு கூறினார்
Rate this:
ஸ்டிக்கன் 2 - Al-Budayyi,பஹ்ரைன்
07-ஆக-202202:30:09 IST Report Abuse
ஸ்டிக்கன் 2புது உருட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது , இங்கே திருட்டில் ஈடுபட்டவர்கள் ஒருவேளை கழகத்தினரோ?...
Rate this:
ஸ்டிக்கன் 2 - Al-Budayyi,பஹ்ரைன்
07-ஆக-202209:05:45 IST Report Abuse
ஸ்டிக்கன் 2அதுமட்டுமல்ல புறாவே துருக்கியின் பில்கரா யூனிவெர்சிட்டியின் துரமேஷா என்பவர் சமீபத்தில் அங்கே அகழ்வாராய்ச்சி செய்ததில் தமிழர்கள் அங்கே வந்துதான் கோவில் செய்ய கருவிகள் வாங்கி ட்ரைனிங் எடுத்து சென்றதா ஆய்வு தெரிவிக்கிறது என்றும் எழுதி வைப்போம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X