பெற்றோரின் ஜாதிச் சான்றிதழ் கேட்பதால் கிராமப்புற மாணவர்களுக்கு சிக்கல்| Dinamalar

பெற்றோரின் ஜாதிச் சான்றிதழ் கேட்பதால் கிராமப்புற மாணவர்களுக்கு சிக்கல்

Added : ஆக 06, 2022 | |
செஞ்சி: பாரா மெடிக்கல் பிரிவுகளுக்கு ஆன் லைனில் விண்ணப்பிக்க பெற்றோரின் ஜாதிச் சான்றிதழ் கேட்பதால் கிராமப்புற மாணவர்களுக்கு சிக்கில் எழுந்துள்ளது.துணை மருத்துவ படிப்பு எனப்படும் பாரா மெடிக்கல் பிரிவுகளான பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட படிப்புகளுக்கு 1ம் தேதி முதல் 12ம் தேதி மாலை 5:00 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய வேண்டும். 12ம் வகுப்பு தேர்ச்சி

செஞ்சி: பாரா மெடிக்கல் பிரிவுகளுக்கு ஆன் லைனில் விண்ணப்பிக்க பெற்றோரின் ஜாதிச் சான்றிதழ் கேட்பதால் கிராமப்புற மாணவர்களுக்கு சிக்கில் எழுந்துள்ளது.

துணை மருத்துவ படிப்பு எனப்படும் பாரா மெடிக்கல் பிரிவுகளான பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட படிப்புகளுக்கு 1ம் தேதி முதல் 12ம் தேதி மாலை 5:00 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய வேண்டும். 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் மாணவர்களின் கல்வித் தகுதி, மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ், இருப்பிடம் மற்றும் ஜாதிச் சான்றிதழ் ஆகியவற்றுடன் பெற்றோரின் ஜாதிச் சான்றிதழையும் இணைக்க வேண்டும் என இந்த ஆண்டு புதிதாக கேட்டுள்ளனர்.

ஆன்லைனில் பெற்றோரின் ஜாதிச் சான்றிதழ் இணைக்காமல் இருந்தால் விண்ணப்பங்களை ஏற்க மறுக்கிறது.கிராமங்களில் ஏராளமான குடும்பங்களில் தாய், தந்தை இருவரும் படிக்காதவர்களாக இருக்கின்றனர். இவர்களிடம் ஜாதிச் சான்றிதழ் இருப்பதில்லை. தந்தையை இழந்த குடும்பத்தில் தாய் படிக்காதவராக உள்ளார்.பள்ளி படிப்பை பாதி விட்ட பெற்றோர் பள்ளி சான்றிதழை பள்ளியில் பெறாமலே உள்ளனர்.

பள்ளிச் சான்றிதழ் இல்லாமல் வருவாய்த் துறையிடம் பெற்றோர் ஜாதிச் சான்றிதழ் பெற முடியாது.ஆன்லைனில் அனைத்து ஆவணங்களுடன் ஜாதிச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தாலும் சான்றிதழ் கிடைக்க 3 முதல் 7 நாட்கள் வரை ஆகும்.இது போன்ற சிக்கலால் கிராமப்புற மாணவர்களின் பெற்றோர் வீண் அலைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். எனவே அரசு இந்த முறையை பரிசீலனை செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X