பிரதமருக்காக வாங்கவிருக்கும் புதிய இவி கார்!

Updated : ஆக 06, 2022 | Added : ஆக 06, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
பிரதமர் அலுவலகம் தற்போது இருக்கும் காருக்கு பதிலாக புதிய மின்சார காரை வாங்க திட்டமிட்டுள்ளது.இந்தியாவில், எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக பிரதமருக்காக பயன்படுத்தப்படும் சொகுசு காருக்கு பதில் எலெக்ட்ரிக் கார் வாங்க பிரதமர் அலுவலகம் திட்டமிட்டுள்ளது. தற்போது, பிரதமர் மோடி, உலகில் அதிக பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த
DinamalarDotcom, Special, Automobile, Cars, PrimeMinister, MercedesBenzMayBatchs650, MercedesBenz EQS EV, தினமலர்டாட்காம், ஸ்பெஷல், ஆட்டோமொபைல், கார்கள், இந்திய பிரதமர், மெர்சிடிஸ்பென்ஸ்மேபேச் எஸ்650, மெர்சிடிஸ்பென்ஸ் இகியூஎஸ்

பிரதமர் அலுவலகம் தற்போது இருக்கும் காருக்கு பதிலாக புதிய மின்சார காரை வாங்க திட்டமிட்டுள்ளது.


இந்தியாவில், எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக பிரதமருக்காக பயன்படுத்தப்படும் சொகுசு காருக்கு பதில் எலெக்ட்ரிக் கார் வாங்க பிரதமர் அலுவலகம் திட்டமிட்டுள்ளது. தற்போது, பிரதமர் மோடி, உலகில் அதிக பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களைப் பெற்றிருக்கும் மெர்சிடஸ் பென்ஸ் மேபேச் எஸ்650 (Mercedes Benz Maybach S650) காரை பயன்படுத்தி வருகிறார். இதற்கு முன்பாக பிரதமர் மோடி மிகவும் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 200 சீரிஸ் மற்றும் பிரத்யேகமாக நியமிக்கப்பட்ட உயர்-பாதுகாப்பு ரேஞ்ச் ரோவர் வோக் ஆகியவற்றை பயன்படுத்திக் கொண்டிருந்தார்.latest tamil news
இந்நிலையில் தற்போது பிரதமர் மோடியின் பயன்பாட்டிற்காக வாங்க இருக்கும் காரை பற்றிய முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை..அது என்னமாதிரியான பாதுகாப்பு சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் எந்த நிறுவனத்தைச் சேர்ந்த காராக இருக்கும் என எதிர்பார்ப்புகளை அதிகரிக்க செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல், தற்போது பயன்படுத்தி வரும் சொகுசு கார், விஆர்10 அளவிலான பாதுகாப்பை வழங்குவதற்கான சான்றிதழைப் பெற்றுள்ளது. அதாவது ஏகே 47 துப்பாக்கி தோட்டாக்கள் மூலம் 15 கிலோ டிஎன்டி குண்டு வெடிப்பைத் தாங்கும். இது தவிர விஷவாயு தாக்குதல், உயிரி ஆயுத தாக்குதல் உள்ளிட்டவைகளிலிருந்தும் இருந்தும் பாதுகாக்கும்.


latest tamil news
பிரதமர் அலுவலகம் வாங்க இருக்கும் புதிய இவி காரில் கூடுதல் அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வட்டாரங்களில் கசிந்த தகவலின் படி, மெர்சிடஸ் பென்ஸ் இகியூஎஸ் (Mercedes Benz EQS) தேர்வாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் எலக்டிரிக் பிராண்டு இன்னும் வரவில்லை என்றாலும், விரைவில் அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதாம்.


latest tamil news
இது EQS செடான் டைப் காராகும். அதுமட்டுமல்லாமல், உயர் சவாரி எஸ்யுவி பாடி ஸ்டைலில் தொகுக்கப்பட்ட S-வகுப்பு தர ஆடம்பர காராகும். பிரதமர் பயன்படுத்திய முந்தைய கார்களைப் விட அதிக தொழில்நுட்ப வசதிகளும், மேம்படுத்தப்பட்ட அம்சங்களும் இந்த காரில் இடம்பெற்றிருக்கும் என தெரிகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
08-ஆக-202214:39:12 IST Report Abuse
sankar முப்பது ஆண்டுகளுக்கு முன் பணக்கார நாடான ஸ்வீடனில் ஓலஃப் பாமே எனும் அருமையான பிரதமர் இருந்தார். வாய் ஜாலம் இல்லாமல் அமைதியாக சாதித்தவர். அவர் பயன் படுத்தியது சாதாரண கார் தான். இங்கே ஆடம்பரம். அதற்கு பெயர் மேக் இண்டியா என்ற ஆரவார்ம்.
Rate this:
Radja - Singapore,சிங்கப்பூர்
08-ஆக-202216:36:29 IST Report Abuse
Radjaநாட்டின் உயர் மட்டத்தில் இருக்கும் ஜனாதிபதி பிரதமர் ஆகியோருக்கு பாதுகாப்பு கொடுப்பது அவசியம். அன்னன் தனியாக அவர் இருக்கும் சென்னையில் பொய் வருவாரா? அப்படி இருக்கும்போது ஜனாதிபதி பிரதமர் ஆகியோருக்கு பாதுகாப்பு கொடுப்பது அவசியம்.இதை அன்னன் உணர நாட்கள் ஆகும் போல....
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
07-ஆக-202210:43:50 IST Report Abuse
Natarajan Ramanathan இந்த மாதிரி பாதுகாப்பு விஷயங்கள் வெளியே தெரிவதே அவசியமில்லை...
Rate this:
Cancel
நல்லவன் - chennai,இந்தியா
07-ஆக-202210:32:27 IST Report Abuse
நல்லவன் make in india ன்னு பகட்டா பேசிட்டு வெளிநாட்டு car ல இருந்தது கை காமிக்கிறாரே - வாழ்க, வளர்க வாக்காளர்கள் அறிவு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X