வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி- நாளை நடக்கவுள்ள 'நிடி ஆயோக்' நிர்வாக கவுன்சிலின் ஏழாவது கூட்டத்தை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் , பீகார் முதல்வர் நிதிஷ் குமார் புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுதும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அமைப்பாக திட்ட கமிஷன் இருந்து வந்தது. கடந்த 2014-ல் பா.ஜ., ஆட்சிக்கு வந்தவுடன், திட்ட கமிஷன் கலைக்கப்பட்டது. இதற்கு பதிலாக நிடி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டது. இது, மத்திய அரசின் கொள்கைகளை வடிவமைக்கும் அமைப்பாக இயங்கி வருகிறது. நிடி ஆயோக்கின் உயரிய அமைப்பாக நிர்வாக கவுன்சில் உருவாக்கப்பட்டது.
பிரதமர் தலைமையில் அந்தக்குழு வில் அனைத்து மாநில முதல்வர்கள், கவர்னர்கள், மத்திய அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் கவுன்சிலில் இடம்பெற்றுள்ளனர்.நிடி ஆயோக் நிர்வாக கவுன்சிலின் ஏழாவது கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நாளை (ஆக.07) நடக்கிறது.
இக்கூட்டத்தை தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி முதல்வர் சந்திரசேகர ராவ் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பாக கடிதம் ஒன்றை பிரதமருக்கு அனுப்பியுள்ளதாகவும் அதில் தாம் புறக்கணிப்பதற்கான விரிவான விளக்கம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
நிதிஷூம் புறக்கணிப்பு
பாஜ., கூட்டணி உடன் ஆட்சி செய்து வரும் பீகார் ஐக்கிய ஜனதா கட்சியை சேர்ந்த நிதிஷ்குமாரும் நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளார்.