துணை ஜனாதிபதி தேர்தல்: ஜக்தீப் தங்கர் வெற்றி- 11-ம் தேதி பதவியேற்பு

Updated : ஆக 06, 2022 | Added : ஆக 06, 2022 | கருத்துகள் (5+ 8) | |
Advertisement
புதுடில்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் , தே.ஜ. கூட்டணி வேட்பாளர் ஜக்தீப் தங்கர் வெற்றி பெற்றார். எதிர்கட்சிகளின் வேட்பாளர் மார்க்கெரட் ஆல்வா தோல்வியடைந்தார். மொத்தம் பதிவான 725 ஓட்டுக்களில் ஜெகதீப் தங்கருக்கு 528 ஓட்டுக்களும் மார்கெரட் ஆல்வாவுக்கு 182 ஓட்டுக்குளும் கிடைத்தது. 15 ஓட்டுக்கள் செல்லாதவை ஆகின.ஜெகதீ் தங்கர் 72.8 சதவீத ஒட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.புதிய
vice presidential election; result

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் , தே.ஜ. கூட்டணி வேட்பாளர் ஜக்தீப் தங்கர் வெற்றி பெற்றார். எதிர்கட்சிகளின் வேட்பாளர் மார்க்கெரட் ஆல்வா தோல்வியடைந்தார். மொத்தம் பதிவான 725 ஓட்டுக்களில் ஜெகதீப் தங்கருக்கு 528 ஓட்டுக்களும் மார்கெரட் ஆல்வாவுக்கு 182 ஓட்டுக்குளும் கிடைத்தது. 15 ஓட்டுக்கள் செல்லாதவை ஆகின.ஜெகதீ் தங்கர் 72.8 சதவீத ஒட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18ல் நடந்தது. இதில்தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், ஒடிசாவின் பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு வெற்றி பெற்று கடந்த ஜூலை 25-ல் பதவியேற்றார்.


latest tamil newsஇதற்கிடையே, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆக., 10ல் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து துணை ஜனாதிபதிக்கான தேர்தல் இன்று (ஆக., 6 ) நடந்தது.இதில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மேற்குவங்க முன்னாள் கவர்னர் ஜக்தீப் தங்கர் பேட்டியிட்டார். எதிர்க்கட்சிகள் சார்பில் மார்கெரட் ஆல்வா போட்டியிட்டார்.

இன்று ஓட்டுப்பதிவு நடந்தது. லோக்சபா மற்றும் ராஜ்யசபாவின் நியமன எம்.பி.,க்கள் உட்பட அனைத்து எம்.பி.,க்களும் ஓட்டளித்து துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பர். இதையடுத்து மாலை ஓட்டு எண்ணிக்கை துவங்கியது.இதில் தே.ஜ. கூட்டணி வேட்பாளர் ஜக்தீப் தங்கர் வெற்றி பெற்று துணை ஜனாதிபதியாக தேர்வு பெற்றார். வரும் ஆக.11-ல் பதவியேற்கிறார்.


latest tamil news


பிரதமர் மோடி வாழ்த்து


புதிய துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜெகதீப் தங்கரை பிரதமர் மோடி, நேரில் சென்று வாழ்த்தினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (5+ 8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
06-ஆக-202220:50:17 IST Report Abuse
Bhaskaran எரிவாயு உருளைகளை அதிகம் உபயோகித்தும், தீவிரவாதிகளுக்கு ஆதரவளித்த அன்சாரியைப்போல் இந்தியாவில் எந்த துணை ஜனாதிபதியும் இருக்கமாட்டார்
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
06-ஆக-202220:37:16 IST Report Abuse
sankaranarayanan 15 ஓட்டுக்கள் செல்லாதவை ஆகின என்று கேட்கவே வெட்கப்படுகிறேன் வேதனைப்படுகிறேன். மக்களவை மாநில அவை நபர்கள் பதிணைந்து பேர்கள் ஒட்டு செல்லாதவை என்றால் அந்த நபர்கள் அந்தந்த அவைகளிருந்த உடனே தானாகவே ராஜினாமா செய்ய வேண்டும். இவர்கள் அந்தந்த தொகுதி மக்களுக்கு துரோகம் விளைவித்தவர்கள் என்றுதான் அர்த்தம். இவ்வளவு முன்னேற்றம் அடங்கிய நமது நாட்டில் இன்னும்கூட இப்படி நபர்கள் இருக்கிறார்கள் என்றல் அவர்கள் எதற்கும் அருகதை அற்றவர்கள் என்றுதான் அர்த்தம். ஓட்டு போடாமல் - விருப்பப்படாமல் விலகி இருக்கலாம். அது வேறு. செல்லாத ஒட்டை போடவா ஜனநாயகத்தில் மக்கள் இவர்களை தேர்ந்தெடுத்தார்கள்?. வெட்கம் - வெட்கம் - வெட்கம்.
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
06-ஆக-202220:13:14 IST Report Abuse
a natanasabapathy Ottu poda theriyaathavarkalai yellaam thernthu yeduththarkku makkal vetkappada vum. Sonia rahulukku ithu thakuntha padippinai. Intha iruvarum katchi poruppil irunthu veliyerinasl thaan congress puzhaikkum
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X