காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தலத்தின் விண்ணேற்புப் பெருவிழா

Added : ஆக 06, 2022 | |
Advertisement
கோவில்பட்டி அருகேயுள்ள காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தலத்தின் விண்ணேற்புப் பெருவிழா கொடியேற்றம் இன்று நடந்தது.வீரமாமுனிவர் பங்குகுருவாகப் பணியாற்றிய இந்த ஆலயத்தின் விண்ணேற்புப் பெருவிழா கொடியேற்றத்தையொட்டி, நேற்று மாலை 6 மணிக்கு மிக்கேல் அதிதூதரின் திருவுருவப் பவனி நடந்தது.தொடர்ந்து, 6.30 மணிக்கு கொடிமரம் நடப்பட்டது. பின்னர், கொடிமரத்தில் முதலாவதாக
 காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தலத்தின் விண்ணேற்புப் பெருவிழா

கோவில்பட்டி அருகேயுள்ள காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தலத்தின் விண்ணேற்புப் பெருவிழா கொடியேற்றம் இன்று நடந்தது.
வீரமாமுனிவர் பங்குகுருவாகப் பணியாற்றிய இந்த ஆலயத்தின் விண்ணேற்புப் பெருவிழா கொடியேற்றத்தையொட்டி, நேற்று மாலை 6 மணிக்கு மிக்கேல் அதிதூதரின் திருவுருவப் பவனி நடந்தது.
தொடர்ந்து, 6.30 மணிக்கு கொடிமரம் நடப்பட்டது. பின்னர், கொடிமரத்தில் முதலாவதாக திருத்தலக் கொடியும், அதைத் தொடர்ந்து இறைமக்கள் கொண்டு வந்திருந்த வண்ணக்கொடிகள் அணிவகுப்பாகக் கட்டப்பட்டன.
நெல்லை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் கொடியை ஆசீர்வதிக்க, கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.அதனைத் தொடர்ந்து, வட்டார அதிபர் அருட்திரு சார்லஸ், புனித ஆந்தோணியார் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளி தாளாளர் எம்.எஸ்.அந்தோணிசாமி ஆகியோர் திருப்பலி மற்றும் மறையுரை நிகழ்த்தினர்.
இதில் திரளான இறைமக்கள் கலந்து கொண்டனர். கொடியேற்றம் நிகழ்ச்சியை முன்னிட்டு, இன்று மாலை 5.30 மணி முதல் அசன விருந்து நடந்தது.
கொடியேற்று விழாவையொட்டி, கோவில்பட்டி செஞ்சுரி பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தின் சார்பில் வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டது.
திருவிழாவின் 2ம் திருநாளான நாளை ( ஆகஸ்ட் 7) காலை 8.30 மணிக்கு புதுநன்மை விழா, 8ம் திருநாளான ஆகஸ்ட் 13ம் தேதி காலை 9 மணிக்கு மரியன்னை மாநாடு, 9ம் திருநாளான ஆகஸ்ட் 14ம் தேதி மாலை 6.30 மணிக்கு மாலை ஆராதனை மற்றும் ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது.
10ம் திருநாளான ஆகஸ்ட் 15ம் தேதி அதிகாலை 2 மணிக்கு பாளை மறை மாவட்ட ஆயர் எஸ்.அந்தோணிசாமி தலைமையில் தேரடித் திருப்பலி நடைபெறும். அதைத் தொடர்ந்து, கும்பிடு சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை திருத்தல அதிபர் அந்தோனி அ.குரூஸ், உதவி பங்குதந்தை ஜெனால்டு அ.ரீகன், மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகள் மற்றும் காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி, குருவிநத்தம், செவல்பட்டி பகுதி இறைமக்கள் செய்து வருகின்றனர்.

போலீஸ் பாதுகாப்பு: காமநாயக்கன்பட்டி திருவிழாவையொட்டி, மாவட்ட காவல் எஸ். பி, பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், கோவில்பட்டி டி.எஸ்.பி., வெங்கடேஷ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X