இளையபெருமாள் நல்லுார் யானை சிற்பம் புனரமைப்பு

Added : ஆக 06, 2022 | |
Advertisement
சென்னை:அரியலுார் மாவட்டம், இளையபெருமாள் நல்லுாரில் உள்ள யானை சிற்பம், தமிழக தொல்லியல் துறையினரால் புனரமைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் சோழர்களுக்குப் பின், 12ம் நுாற்றாண்டில், விஜயநகர பேரரசர்கள் ஆட்சி அமைத்தனர். அவர்கள் தங்களின் தளபதிகளான நாயக்கர்களுக்கு, அரச பிரதிநிதி அந்தஸ்தை வழங்கினர். விஜயநகர பேரரசு பலமிழந்த 16ம் நுாற்றாண்டில், நாயக்கர்களே ஆட்சியாளர்களாக
இளையபெருமாள் நல்லுார் யானை சிற்பம் புனரமைப்பு

சென்னை:அரியலுார் மாவட்டம், இளையபெருமாள் நல்லுாரில் உள்ள யானை சிற்பம், தமிழக தொல்லியல் துறையினரால் புனரமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சோழர்களுக்குப் பின், 12ம் நுாற்றாண்டில், விஜயநகர பேரரசர்கள் ஆட்சி அமைத்தனர். அவர்கள் தங்களின் தளபதிகளான நாயக்கர்களுக்கு, அரச பிரதிநிதி அந்தஸ்தை வழங்கினர். விஜயநகர பேரரசு பலமிழந்த 16ம் நுாற்றாண்டில், நாயக்கர்களே ஆட்சியாளர்களாக துவங்கினர். இவ்வாறு ராஜேந்திர சோழனின் தலைநகரான கங்கைகொண்ட சோழபுரமும் நாயக்கர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
அவர்கள், கங்கைகொண்ட சோழபுரத்துக்கு அருகில் உள்ள இளையபெருமாள் நல்லுாரின் பெருமாள் கோவிலில், மிக பிரமாண்டமான யானை சிற்பத்தை செய்தனர்.சுதை சிற்பமான இது, 80 அடி உயரம், 41 அடி நீளம், 12 அடி அகலத்துடன் கம்பீரமாக உள்ளது. யானையின் கழுத்து மேல் பகுதியில் மணிகள், கால்களுக்கு நடுவில் இருபுறங்களிலும் தாளமிடும் இசைக் கலைஞர்களின் சிற்பம், முன்பக்கம் பலாப்பழம் திருடியவனை தும்பிக்கையால் சுழற்றி, ஒரு காலை வைத்து மிதிக்கும் வகையில் காவல் அரணாக நிற்கிறது.
இது, நாயக்க மன்னர்களின் கடவுள் சார்ந்த கதையின் ஒரு காட்சியாக இருக்கலாம் என, நம்பப்படுகிறது. முந்நுாறு ஆண்டுகள் பழைமையான இந்த சிற்பம், 2020 டிசம்பரில் பாதுகாக்கப்பட்ட புராதன சின்னமாக, தமிழக தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்டது. அத்துறை சார்பில், தற்போது, யானை சிற்பத்தில் படிந்திருந்த பூஞ்சைகள் அகற்றப்பட்டு, வெடிப்புகள் பழமை மாறாமல் சீரமைக்கப்பட்டு, சுற்றிலும் கம்பி வேலி, புல்வெளி அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், இங்கு சிற்பம் குறித்த தகவல், புராதன சின்னம் பற்றிய விழிப்புணர்வு, பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்த தகவல்கள் பதாகைகளாக வைக்கப்பட்டுள்ளன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X