வேடந்தாங்கல், கூத்தன்குளம் உள்ளிட்ட6 நீர் நிலைகளுக்கு சர்வதேச அங்கீகாரம்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
சென்னை:தமிழக வனத்துறை முயற்சியால், வேடந்தாங்கல் உள்ளிட்ட ஆறு பறவை சரணாலயங்கள், சர்வதேச அளவிலான ராம்சார் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. உலக அளவில், சதுப்பு நிலங்களை பாதுகாப்பதற்காக, 1971ல் ஈரான் நாட்டில், ராம்சார் நகரில் சர்வதேச மாநாடு நடத்தப்பட்டது. அதில் ஏற்பட்ட சர்வதேச உடன்பாடு அடிப்படையில், சதுப்பு நிலங்கள் பட்டியலிடும் பணிகள் துவங்கின.தமிழகத்தில், நாகப்பட்டினம்

சென்னை:தமிழக வனத்துறை முயற்சியால், வேடந்தாங்கல் உள்ளிட்ட ஆறு பறவை சரணாலயங்கள், சர்வதேச அளவிலான ராம்சார் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. உலக அளவில், சதுப்பு நிலங்களை பாதுகாப்பதற்காக, 1971ல் ஈரான் நாட்டில், ராம்சார் நகரில் சர்வதேச மாநாடு நடத்தப்பட்டது.
அதில் ஏற்பட்ட சர்வதேச உடன்பாடு அடிப்படையில், சதுப்பு நிலங்கள் பட்டியலிடும் பணிகள் துவங்கின.தமிழகத்தில், நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரை பறவைகள் சரணாலயம் மட்டுமே ராம்சார் பட்டியலில் இடம் பெற்று இருந்தது. மீதமுள்ள 15 பறவைகள் சரணாலயங்களை, இப்பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கைகளை, தமிழக வனத்துறை முடுக்கிவிட்டது.
முதற்கட்டமாக, சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம்; செங்கல்பட்டு மாவட்டம், கரிக்கிலி பறவைகள் சரணாலயம்; கடலுார் மாவட்டம், பிச்சாவரம் அலையாத்தி காடுகள் ஆகியவை, கடந்த மாதம் ராம்சார் பட்டியலில் சேர்க்கப்பட்டன.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல்; திருநெல்வேலி மாவட்டம் கூந்தன்குளம், மன்னார் வளைகுடா உயிர்சூழல் மண்டலம்; கன்னியாகுமரி மாவட்டம் வேம்பனுார்; ஈரோடு மாவட்டம் வெள்ளோடு, திருவாரூர் மாவட்டம் உதயமார்த்தாண்டபுரம் ஆகிய பறவைகள் சரணாலயங்கள் ராம்சார் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.


வேடந்தாங்கல்


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகாவில், 74 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், 300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பாரம்பரிய சிறப்புள்ளது. நாட்டிலேயே மிகவும் பழமையான, பாரம்பரிய சிறப்புள்ள பறவைகள் சரணாலயமாக இது அறியப்படுகிறது.கூழைக்கடா, மஞ்சள்மூக்கு நாரை, பாம்புதாரா உள்ளிட்ட, 40 வகையை சேர்ந்த, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வந்து செல்கின்றன. சர்வதேச அளவில் சுற்றுலா பயணியரின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு மிக பிரபலமாக இடமாக இது அமைந்துள்ளது.



கூந்தன்குளம்


திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தாலுகாவில், 134 ஏக்கர் பரப்பளவில் கூந்தன் குளம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. பூநாரைகள், கூழைக்கடா உள்ளிட்ட, 40 வகையை சேர்ந்த வலசை பறவைகள் இங்கு வந்து செல்கின்றன. கூந்தன் குளத்தை சுற்றியுள்ள பல்வேறு நீர் நிலைகளும் பறவைகள் சரணாலயமாக மாறி வருகின்றன.


மன்னார் வளைகுடா


ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தை ஒட்டி துவங்கும் மன்னார் வளைகுடா உயிர் சூழல் மண்டலம், 321 ஏக்கரில், 21 சிறு சிறு தீவுகளை உள்ளடக்கியதாக உள்ளது. கடற்பசு உள்ளிட்ட அரிய வகை உயிரினங்கள் மட்டுமின்றி, கடல் சார்ந்த வலசை பறவைகளில் புகலிடமாக இப்பகுதி அமைந்துள்ளது.


வேம்பனுார் வளாகம்


கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரம், தேரூர் பறவைகள் சரணாலயத்தைச் சேர்ந்த நீர் நிலைகளில் ஒன்றாக வேம்பனுார் ஏரி அறியப்படுகிறது. மொத்தம், 49 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரி, அரியவகை வலசை பறவைகள் வந்து செல்லும் மிக முக்கிய இடமாக உள்ளது.வெள்ளோடு சரணாலயம் ஈரோடு மாவட்டத்தில், 190 ஏக்கர் பரப்பளவில் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு, மஞ்சள் மூக்கு நாரை, ஊசிவால் வாத்து உள்ளிட்ட, 109 வகையை சேர்ந்த பறவைகள் வந்து செல்வதாக, வனத்துறை ஆவணங்கள் வாயிலாக தெரியவருகிறது.


உதயமார்த்தாண்டபுரம்


திருவாரூர் மாவட்டத்தில், 111 ஏக்கர் பரப்பளவில் உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. ஆண்டு தோறும், செப்., முதல் டிச., வரையிலான மாதங்களில், வலசை பறவைகள் இங்கு முகாமிடுகின்றன.


வனத்துறைக்கு வெற்றி


இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், ஒரு இடம் மட்டுமே ராம்சார் பட்டியலில் இடம் பெற்றிருந்த நிலையில், ஒரே ஆண்டில் ஒன்பது இடங்கள் சேர்க்கப் பட்டுள்ளன. இதனால், சர்வதேச அளவில் ராம்சார் பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த 10 இடங்கள் இடம் பெற்றுள்ளன.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 16 பறவைகள் சரணாலயங்களில், 10 இடங்கள் ராம்சார் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது, வனத்துறை அதிகாரிகளின் முயற்சிக்கு கிடைத்த மிக பெரிய வெற்றி. இதனால், சர்வதேச அங்கீகாரத்துடன், அடிப்படை மேம்பாட்டு பணிகளுக்கு கூடுதல் நிதி கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X