சுதந்திர தின விழா கொண்டாட்டம் பொதுமக்களை அனுமதிக்க முடிவு

Added : ஆக 06, 2022 | |
Advertisement
சென்னை:தமிழகத்தில், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், சுதந்திர தின விழா கொண்டாட்டங்களில், பொதுமக்களை அனுமதிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவின் 75ம் ஆண்டு சுதந்திர தின நிறைவு விழா, இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்பில், சென்னை கோட்டை கொத்தளத்தில், சுதந்திர தின விழா கொண்டாடப் பட உள்ளது. முதல்வர் ஸ்டாலின் இரண்டாம் ஆண்டாக, தேசியக் கொடி ஏற்ற உள்ளார்.

சென்னை:தமிழகத்தில், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், சுதந்திர தின விழா கொண்டாட்டங்களில், பொதுமக்களை அனுமதிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் 75ம் ஆண்டு சுதந்திர தின நிறைவு விழா, இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்பில், சென்னை கோட்டை கொத்தளத்தில், சுதந்திர தின விழா கொண்டாடப் பட உள்ளது. முதல்வர் ஸ்டாலின் இரண்டாம் ஆண்டாக, தேசியக் கொடி ஏற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா தொற்று காரணமாக, சுதந்திர தின விழாவில் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது, கொரோனா தொற்று குறைந்து வருவதால், குழந்தைகள் தவிர்த்து மற்றவர்களை அனுமதிக்க, அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டுகளில், அணிவகுப்பு போலீசார் எண்ணிக்கை குறைக்கப் பட்டு இருந்தது. இந்த ஆண்டு 75ம் ஆண்டு சுதந்திர தின விழாவை சிறப்பாகக் கொண்டாட, அரசு முடிவு செய்து இருப்பதால், அணிவகுப்பில் அனைத்து பிரிவினரையும் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தன்று, மாவட்ட கலெக்டர்கள், தியாகிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, அவர்களுக்கு கதராடை அணிவித்து கவுரவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழாவிற்காக, முக்கியமான அரசு கட்டடங்களை, வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கும் பணி நடந்து வருகிறது.சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சிகள் துவங்கி உள்ளன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X