தெற்கு ரயில்வேயில் 'சோலார்' மின் உற்பத்தி

Added : ஆக 06, 2022 | |
Advertisement
சென்னை:சூரியசக்தி மின் உற்பத்தி செய்வதற்காக, 288 ஏக்கர் இடம் கண்டறியப்பட்டு உள்ளதாக, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தெற்கு ரயில்வேயில் ஆறு கோட்டங்களில் மொத்தம் 5.06 மெகா வாட் அளவுக்கு சூரியசக்தி மின் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 2017 ஆண்டு முதல், இவ்வாண்டு ஜூன் வரையில் 1.60 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இதனால், 6.45 கோடி ரூபாய்

சென்னை:சூரியசக்தி மின் உற்பத்தி செய்வதற்காக, 288 ஏக்கர் இடம் கண்டறியப்பட்டு உள்ளதாக, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு ரயில்வேயில் ஆறு கோட்டங்களில் மொத்தம் 5.06 மெகா வாட் அளவுக்கு சூரியசக்தி மின் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 2017 ஆண்டு முதல், இவ்வாண்டு ஜூன் வரையில் 1.60 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இதனால், 6.45 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தெற்கு ரயில்வேயின், மதுரை கோட்டத்தில் பல்வேறு இடங்களில் 10.5 மெகா வாட் அளவுக்கு காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன.
இதனால், 48.54 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கையால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், சூரியசக்தி மின் உற்பத்தியில் தன்னிறைவை பெற்றுள்ளது.இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில் நிலையங்களின் மேற்கூரைகள், அலுவலகங்கள், பணிமனைகள், தொழிற்சாலைகளில் சூரியசக்தி மின் உற்பத்தி கருவிகளை பொருத்தி, மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறோம்.
அதேபோல், காற்றாலைக்கு வாய்ப்புள்ள இடங்களிலும், கருவிகளை நிறுவி மின் உற்பத்தி செய்து வருகிறோம். இதற்கிடையே, காலியாகவுள்ள 288 ஏக்கர்இடத்தை அடையாளம் கண்டு, தயாராக வைத்துள்ளோம். டெண்டர் வாயிலாக நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, இந்த இடங்களில் சூரியசக்தி மின் கருவிகளை பொருத்தி, மின்சாரம் தயாரிக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X