'டெஸ்லா' பங்கு பிரிப்புக்குமுதலீட்டாளர்கள் அனுமதி

Added : ஆக 06, 2022 | |
Advertisement
புதுடில்லி:'டெஸ்லா' நிறுவனத்தின் பங்கு பிரிப்புக்கு, அதன் முதலீட்டாளர்கள் அனுமதி வழங்கி உள்ளனர்.மூன்று பங்குகளுக்கு ஒரு பங்கு என, பங்கு பிரிக்கும் டெஸ்லாவின் முயற்சிக்கு, அதன் முதலீட்டாளர்கள் இசைவு தெரிவித்துள்ளனர். இதனால், இனி சில்லரைமுதலீட்டாளர்களும் டெஸ்லா நிறுவன பங்குகளை வாங்கும் நிலை ஏற்படும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். டெஸ்லா ஆண்டு கூட்டத்தில் இந்த
'டெஸ்லா', பங்கு பிரிப்புக்கு,முதலீட்டாளர்கள்,அனுமதி

புதுடில்லி:'டெஸ்லா' நிறுவனத்தின் பங்கு பிரிப்புக்கு, அதன் முதலீட்டாளர்கள் அனுமதி வழங்கி உள்ளனர்.

மூன்று பங்குகளுக்கு ஒரு பங்கு என, பங்கு பிரிக்கும் டெஸ்லாவின் முயற்சிக்கு, அதன் முதலீட்டாளர்கள் இசைவு தெரிவித்துள்ளனர். இதனால், இனி சில்லரைமுதலீட்டாளர்களும் டெஸ்லா நிறுவன பங்குகளை வாங்கும் நிலை ஏற்படும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

டெஸ்லா ஆண்டு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதில் பங்கேற்ற அதன் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், வாகன உற்பத்தியை 2 கோடியாக அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்தி உள்ளார்.

தற்போது இந்நிறுவனம், ஆண்டுக்கு 15 லட்சம் கார்களை தயாரித்து வருகிறது. முதலீட்டாளர்கள், எலான் மஸ்க்கின் கவனம் சிதறி, சமூக ஊடகங்கள் பக்கம் திரும்புவதாக கவலைப் பட்டு வந்தனர். ஆனால், அவர் 'டுவிட்டர்' நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் இருந்து பின்வாங்கியதை அடுத்து, தற்போது மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X